சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பண்ணைப்பட்டியில் ரோடு மறியல்

Added : நவ 19, 2021
Share
Advertisement
கன்னிவாடி : பண்ணைபட்டியில் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ரோடு மறியல் நடந்தது.ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பண்ணைப்பட்டில் சமீபத்திய மழையால் மெயின் ரோடு காலனி பகுதியில் தேங்கியது. வெளியேற்றும் நடவடிக்கையில் உள்ளாட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டியது.கழிவுநீர் கலந்த மழைநீர் குடியிருப்புகளில் புகுந்தது. இதையடுத்து பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு கன்னிவாடி- -

கன்னிவாடி : பண்ணைபட்டியில் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ரோடு மறியல் நடந்தது.

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பண்ணைப்பட்டில் சமீபத்திய மழையால் மெயின் ரோடு காலனி பகுதியில் தேங்கியது. வெளியேற்றும் நடவடிக்கையில் உள்ளாட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டியது.கழிவுநீர் கலந்த மழைநீர் குடியிருப்புகளில் புகுந்தது. இதையடுத்து பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு கன்னிவாடி- - ஒட்டன்சத்திரம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., சோமசுந்தரம் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியதால் கலைந்தனர். இதானல் 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது. வெளியூர் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.இதனையடுத்து பண்ணைபட்டி ரோட்டின் குறுக்கே தற்காலிக வாய்க்கால் அமைத்து, கழிவு நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று இப்பகுதியில் சிமென்ட் குழாய்கள் மூலம் தற்காலிக பாலம் அமைக்கும் பணி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X