பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : நவ 19, 2021
Share
Advertisement
கொடைக்கானலில் சூறைக்காற்று கொடைக்கானல்: காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்குகிறது. கொடைக்கானலில் நேற்று காலை முதலே சூறைக்காற்று வீசியதுடன், மிதமான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடும் குளிர் நிலவியது. பொதுமக்கள் ஆயத்த ஆடைகள் அணிந்தும், தீமூட்டியும் குளிர் காய்ந்தனர்.முதியவர் பலிதிண்டுக்கல்: தேனி

கொடைக்கானலில் சூறைக்காற்று

கொடைக்கானல்: காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்குகிறது. கொடைக்கானலில் நேற்று காலை முதலே சூறைக்காற்று வீசியதுடன், மிதமான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடும் குளிர் நிலவியது. பொதுமக்கள் ஆயத்த ஆடைகள் அணிந்தும், தீமூட்டியும் குளிர் காய்ந்தனர்.

முதியவர் பலி

திண்டுக்கல்: தேனி அருகே கொடுவிலார்பட்டியை சேர்ந்த சுப்பையா 67. நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் இருந்து வைகை எக்ஸ்பிரசில் சென்னை சென்றார். வடமதுரை அருகே ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்தார். உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

காதல் ஜோடி தஞ்சம்
வடமதுரை: சாணார்பட்டி அஞ்சுகுழிபட்டியை சேர்ந்தவர் பிச்சைமுத்து 26. சின்னாளப்பட்டி தனியார் வங்கியில் விற்பனை மேலாளராக பணிபுரிகிறார். உறவினரான வேடசந்தூர் ஆத்துமேடு சேர்ந்த ஜமுனாவை 21, காதலித்தார். பெற்றோர் எதிர்ப்பால் காதல் ஜோடி இருவரும் வடமதுரை சித்தி முக்தி விநாயகர் கோயிலில் திருமணம் முடித்தனர். பாதுகாப்பு கோரி வட மதுரை மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில் தஞ்சமடைந்தனர்.

பவுர்ணமி விழா

சின்னாளபட்டி: பவுர்ணமியை முன்னிட்டு சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. உற்ஸவர் கோதண்டராமருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன், குட்டத்துப்பட்டி சாய்பாபா நகர் பிச்சை சித்தர் கோயில்களிலும் பவுர்ணமி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

பசு மாடுகள் மீட்பு

சாமிநாதபுரம்: பழநி அருகே சாமிநாதபுரம் அமராவதி ஆற்றில் மழையினால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று இரண்டு பசு மாடுகள் ஆற்று வெள்ளத்தில் சிக்கின. பழநி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் இரண்டு பசுமாடுகளையும் மீட்டு உரிமையாளர் சாமிநாதபுரத்தை சேர்ந்த கணேஷ்குமாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X