திண்டுக்கல்லில் 30 சதவீதம் கூடுதல் மழை; சத்திரப்பட்டியில் அதிகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் 30 சதவீதம் கூடுதல் மழை; சத்திரப்பட்டியில் அதிகம்

Added : நவ 19, 2021
Share
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் வழக்கத்தை விட 30 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.மாவட்டத்தில் சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. நவ.1 முதல் நேற்று (நவ.18) வரை திண்டுக்கல்லில் 131.8 மி.மீ., நிலக்கோட்டையில் 69.1 மி.மீ., நத்தத்தில் 142 மி.மீ., பழநியில் 203 மி.மீ., ஒட்டன்சத்திரம் சத்திரப்பட்டியில் 309 மி.மீ., வேடசந்துாரில் 207.5 மி.மீ., காமாட்சிபுரத்தில் 213.8 மி.மீ., புகையிலை ஆராய்ச்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் வழக்கத்தை விட 30 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. நவ.1 முதல் நேற்று (நவ.18) வரை திண்டுக்கல்லில் 131.8 மி.மீ., நிலக்கோட்டையில் 69.1 மி.மீ., நத்தத்தில் 142 மி.மீ., பழநியில் 203 மி.மீ., ஒட்டன்சத்திரம் சத்திரப்பட்டியில் 309 மி.மீ., வேடசந்துாரில் 207.5 மி.மீ., காமாட்சிபுரத்தில் 213.8 மி.மீ., புகையிலை ஆராய்ச்சி நிலையம் பகுதியில் 207.3 மி.மீ., கொடைக்கானலில் 211.4 மி.மீ., படகு குழாம் பகுதியில் 185 மி.மீ., என மொத்தம் ஆயிரத்து 879.9 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

கடந்தாண்டு நவ.18 வரை 991.66 மீ.மீ., மழை மட்டுமே பதிவானது.இந்தாண்டு கூடுதலாக 102 மி.மீ., மழை பெய்துள்ளது. அதாவது தற்போது வரை ஆயிரத்து 93 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இது வழக்கத்தை விட 30 சதவீதம் கூடுதலாகும். தொடர் மழையால் நீர் நிலைகள், அணைகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.

பாலாறு பொருந்தலாறு அணை (மொத்தம் 65 அடி) 63.19 அடி, பரப்பலாறு (90) 77.31 அடி, குதிரையாறு (79.99) 77.01, குடகனாறு (27.07) 19.88, நங்காஞ்சியாறு (39.37) 28.48, மஞ்சளாறு (57) 55, மருதாநதி (74) 71, சிறுமலையாறு (27.50)7.50 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதில் பழநி வரதமாநதி (66.47) அணை முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்து வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X