திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலைமேல் இன்று (நவ.,19) மாலை 6:15 மணிக்கு திருக்கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்படுகிறது. கொரோனா தடை உத்தரவால் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏடு கொடுக்கும் விழா
திருக்கார்த்திகை 8ம் நாளான நேற்று காலை கோயில் திருவாட்சி மண்டபத்தில் நடராஜர், சிவகாமி அம்பாள் எழுந்தருளினர். அங்கு தீபாராதனை முடிந்து நடராஜர் கரங்களிலிருந்த ஏடுகள், சிவகாமி அம்பாள் கரங்களில் ஒப்படைக்கப்பட்டது. கோயில் ஓதுவார் திருமுறை பாடினார்.
பட்டாபிஷேகம்
கார்த்திகை பட்டாபிஷேகத்தை முன்னிட்டுநேற்று மாலை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை உற்ஸவர் சன்னதியில் எழுந்தருளினர். கோவர்த்தனாம்பிகை அம்பாளிடமிருந்து பெறப்பட்ட நவரத்தின செங்கோல், சுவாமியின் பிரதிநிதியான திருவிழா நம்பியார் சிவாச்சாரியாரிடம் வழங்கி மரியாதை செய்யப்பட்டது.
தங்க குடத்தில் இருந்த புனிதநீரால் சுவாமியின் கிரீடத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமியின் சிரசில் சாத்துப்படி செய்யப்பட்டு கரங்களில் செங்கோல், சேவல், மயில் கொடிகள் சேர்ப்பிக்கப்பட்டன.
600 போலீசார் பாதுகாப்பு
தீபத்திருவிழாவை முன்னிட்டு மலைக்கு போகும் வழி, தீப மண்டபம், தீபத்துாண், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்கள், மலைக்கு பின்புறம் பகுதிகளில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை வரை மலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE