பொது செய்தி

தமிழ்நாடு

சேவை, உற்பத்தி தொடங்க மானியம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை பைபாஸ் ரோடு கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் சார்பில் பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை தொழில் தொடங்க மானியம் வழங்கப்படுகிறது.ஆணையத்தின் உதவி இயக்குனர் அன்புச்செழியன் கூறியதாவது: மதுரை மாவட்டத்திற்கு உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்கள் தொடங்குவதற்கு ரூ. ஒரு கோடி மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 40

மதுரை : மதுரை பைபாஸ் ரோடு கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் சார்பில் பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை தொழில் தொடங்க மானியம் வழங்கப்படுகிறது.

ஆணையத்தின் உதவி இயக்குனர் அன்புச்செழியன் கூறியதாவது: மதுரை மாவட்டத்திற்கு உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்கள் தொடங்குவதற்கு ரூ. ஒரு கோடி மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 40 சதவீதம் பேர் பயனடைந்துள்ளனர். உற்பத்தி தொழில் தொடங்கினால் குறைந்தது 8 பேருக்கு வேலை வாய்ப்பளிக்க வேண்டும்.

டூவீலர், கார் ரிப்பேரிங் ஒர்க் ஷாப், பியூட்டி பார்லர், ஜிம் போன்ற சேவைத்தொழில்களும் தொடங்கலாம். கிராமப்புறங்களில் பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பி.சி. மைனாரிட்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் தொடங்கினால் 35 சதவீத மானியம் மற்றவர்களுக்கு 25 சதவீத மானியம், நகர்ப்புறங்களில் தொடங்கினால் பெண்கள், இதர பிரிவினருக்கு 25 சதவீதம் மற்றவர்களுக்கு 15 சதவீத மானியம் வழங்கப்படுகிறது என்றார். கூடுதல் தகவல்களுக்கு 98439 85873.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X