பொது செய்தி

தமிழ்நாடு

25 ஆண்டுகளுக்கு பின் மறுகால் பாயும் கண்மாய்

Added : நவ 19, 2021
Share
Advertisement
திருமங்கலம் : திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் எட்டுநாழிபுதுாரில் 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய் உள்ளது. இதன் மூலம் 300 ஏக்கர் பரப்பளவு விவசாயம் செய்யப்படுகிறது.சில நாட்களாக தொடர் மழை பெய்யும் நிலையில் நேற்று திருமங்கலம் பகுதியில் 7 செ.மீ., மழை பதிவானது. இதனால் எட்டுநாழிபுதுார் கண்மாய்நிறைந்து மறுகால் சென்றது. கண்மாய் முறையாக துார்வாரப்படாத நிலையில் ஷட்டரும்

திருமங்கலம் : திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் எட்டுநாழிபுதுாரில் 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய் உள்ளது. இதன் மூலம் 300 ஏக்கர் பரப்பளவு விவசாயம் செய்யப்படுகிறது.சில நாட்களாக தொடர் மழை பெய்யும் நிலையில் நேற்று திருமங்கலம் பகுதியில் 7 செ.மீ., மழை பதிவானது. இதனால் எட்டுநாழிபுதுார் கண்மாய்நிறைந்து மறுகால் சென்றது. கண்மாய் முறையாக துார்வாரப்படாத நிலையில் ஷட்டரும் பராமரிக்கப்படவில்லை. இதனால் தண்ணீர் வீணாகிறது என கிராம மக்கள் தெரிவித்தனர். எனவே ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கண்மாயை துார்வாரி ஷட்டர்பழுதை சரி செய்ய வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பயிர்கள் சேதம்எட்டுநாழி புதூர் கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயம், கத்தரிக்காய், தக்காளி, மிளகாய் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. அரசு நிவாரணம் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X