பொது செய்தி

தமிழ்நாடு

திருந்திய நெல் சாகுபடியில் பாய் நாற்றங்கால் ஆய்வு

Added : நவ 19, 2021
Share
Advertisement
வாடிப்பட்டி : வாடிப்பட்டி வட்டார வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அரசு வேளாண் நவீனமாக்கல் திட்டத்தின் கீழ் சிறுமலையாறு உபவடி நிலப்பகுதி நீரேத்தானில் திருந்திய நெல்சாகுபடியில் விவசாயி கிருஷ்ணன் வயலில் அமைக்கப்பட்ட பாய் நாற்றங்காலை கலெக்டர் அனீஷ்சேகர் பார்வையிட்டார்.வேளாண் துணை இயக்குனர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். உதவி இயக்குனர் வாசுகி வரவேற்றார்.

வாடிப்பட்டி : வாடிப்பட்டி வட்டார வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அரசு வேளாண் நவீனமாக்கல் திட்டத்தின் கீழ் சிறுமலையாறு உபவடி நிலப்பகுதி நீரேத்தானில் திருந்திய நெல்சாகுபடியில் விவசாயி கிருஷ்ணன் வயலில் அமைக்கப்பட்ட பாய் நாற்றங்காலை கலெக்டர் அனீஷ்சேகர் பார்வையிட்டார்.

வேளாண் துணை இயக்குனர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். உதவி இயக்குனர் வாசுகி வரவேற்றார். சாத்தையாறு உப வடிநிலப் பகுதி விவசாயிகளுக்கு செயல் விளக்க திடல் அமைக்க ரூ.10,000 மானியம். இடுபொருட்கள் தக்கைப்பூண்டு 40 கிலோ, ஜிங்க் சல்பேட் 25 கிலோ, உயிர் உரங்கள், பயிர்ப் பாதுகாப்பு மருந்துகள், தென்னை மரம் ஏறும் கருவிகளை கலெக்டர் வழங்கினார்.உழவர் உற்பத்தியாளர் குழுத்தலைவர் ஜெகத்ரட்சகன், கிருஷ்ணன் உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனர். வேளாண் அலுவலர், உதவி அலுவலர்கள், வட்டார தொழில்நுட்ப மேலாளர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X