தெத்துார் தெருக்களில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Added : நவ 19, 2021
Share
Advertisement
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் ஒன்றியம் தெத்துார் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த ஊராட்சியில் நாராயணபுரம் கெங்கமுத்துார், மைல்கல் கொழிஞ்சிப்பட்டி கிராமங்கள் உள்ளன.கெங்கமுத்துார் பகுதி மக்களுக்கான மயானத்தில் தண்ணீர் மின்விளக்குபோன்ற அடிப்படை வசதிகள் இல்லை. குளியல் தொட்டி 5 ஆண்டுகளாக பராமரிப்பின்றி புதர்மண்டி உள்ளது.வடிகால்

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் ஒன்றியம் தெத்துார் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த ஊராட்சியில் நாராயணபுரம் கெங்கமுத்துார், மைல்கல் கொழிஞ்சிப்பட்டி கிராமங்கள் உள்ளன.

கெங்கமுத்துார் பகுதி மக்களுக்கான மயானத்தில் தண்ணீர் மின்விளக்குபோன்ற அடிப்படை வசதிகள் இல்லை. குளியல் தொட்டி 5 ஆண்டுகளாக பராமரிப்பின்றி புதர்மண்டி உள்ளது.வடிகால் வசதியின்றி சிமென்ட் சாலை அமைத்ததால் கழிவுநீர் தெருக்களில் ஓடி, செல்ல வழியின்றி வீடுகளின் முன் தேங்குகிறது. அதன் அருகே உள்ள குடிநீர் குழாய்கள் பயன்படுத்துவதால் சுகாதாரம் பாதிப்பதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

விக்னேஷ்: காலனி தெற்கு தெருவில் உள்ள 50 வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஒரு அடி ஆழத்திற்கு பத்து அடி நீளத்திற்கு மேல் பலஆண்டுகளாக வற்றாமல் தேங்கியுள்ளது. புழு, பூச்சிகள் வீடுகளுக்குள் வருகின்றன. கடந்த முறை தினமலர் செய்தி எதிரொலியாக ஒரு பகுதியில் மட்டும்மண் அடித்தனர். எங்கள் தெருவில் அதே நிலை தொடர்கிறது என்றார்.

கெங்கமுத்துார் தனபாக்கியம்:தெருக்களில் கழிவுநீர் தேங்காமல் ஓடையில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் பாதிப்பு ஏற்படுகிறது. மழைக்காலங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி கொசு தொல்லை அதிகரிக்கின்றது என்றார்.ஊராட்சி தலைவர் ஈஸ்வரி: குடிநீர் குழாய்கள் செல்வதால் காலனியில் இருந்து கழிவுநீரை வெளியேற்ற சிரமம் உள்ளது. விரைவில் குழாய் மூலம் கழிவுநீர் ஓடைக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். கெங்கமுத்துார் மயான பராமரிப்புமராமத்து பணிக்கு ஊராட்சி சார்பில் எழுதி கொடுத்துள்ளோம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X