சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வண்டியூரில் சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Added : நவ 19, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை அன்னை நகர் அக்னிராஜன் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை வண்டியூரில் அன்னை நகர் உள்ளது. இதில் 40 அடி ரோடு வைகை ஆற்றின் அருகே செல்கிறது. இது நான்குவழிச்சாலையை இணைக்கிறது. இதை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க

மதுரை : மதுரை அன்னை நகர் அக்னிராஜன் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை வண்டியூரில் அன்னை நகர் உள்ளது. இதில் 40 அடி ரோடு வைகை ஆற்றின் அருகே செல்கிறது. இது நான்குவழிச்சாலையை இணைக்கிறது. இதை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.

போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு அரசுத் தரப்பில் அதன் வழக்கறிஞர் விபரம் பெற்று தெரிவிக்க வேண்டும் என்றனர். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர், மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி தலைமைப் பொறியாளர், மதுரை மாநகராட்சி மண்டலம் 2 உதவி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி நவ.25க்கு ஒத்திவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X