பஸ்சில் நகை திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ்சில் நகை திருட்டு

Added : நவ 19, 2021
Share
மேலுார் : நயித்தான்பட்டி சுதா 32, நேற்று மதியம் மேலுார் கனரா வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த ஆறே முக்கால் பவுன் நகையை திருப்பி கொண்டு மீதமுள்ள ரூ.14 ஆயிரத்தை பர்சில் வைத்து கொண்டு சொந்த ஊருக்கு அரசு டவுன் பஸ்சில் திரும்பினார். எம்.மலம்பட்டி அருகே சென்ற போது பர்ஸ் காணாமல் போகவே மேலுார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பஸ்சில் இருந்தவர்களை சோதனை செய்த போது

மேலுார் : நயித்தான்பட்டி சுதா 32, நேற்று மதியம் மேலுார் கனரா வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த ஆறே முக்கால் பவுன் நகையை திருப்பி கொண்டு மீதமுள்ள ரூ.14 ஆயிரத்தை பர்சில் வைத்து கொண்டு சொந்த ஊருக்கு அரசு டவுன் பஸ்சில் திரும்பினார். எம்.மலம்பட்டி அருகே சென்ற போது பர்ஸ் காணாமல் போகவே மேலுார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் பஸ்சில் இருந்தவர்களை சோதனை செய்த போது அதில் பயணம் செய்த பெண் உறவினர்களுடன் ஆட்டோவில் ஏறி தப்பினார். விசாரணையில் அவர் மில்கேட் தேவிகா 55, என்பதும் உறவினர்களுடன் சேர்ந்து நகை திருடியது தெரியவந்தது.போலீசார் தேவிகாவை கைது செய்து ரூ.2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X