பொது செய்தி

தமிழ்நாடு

ஜவஹர் சிறுவர் மன்றத்தில் கலை பயிற்சிகள் பெறலாம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மண்டல கலை பண்பாட்டு மையத்தின் கீழ் இயங்கும் ஜவஹர் சிறுவர் மன்றம், விரிவாக்கம், ஊரக மையங்கள் சார்பில் சிறுவர்கள் ஓவியம், பரதம், குரலிசை, சிலம்பம், கிராமிய நடனம், கீபோர்டு உள்ளிட்ட கலை பயிற்சிகள் பெறலாம். சேர்க்கை கட்டணம் உண்டு எனமைய உதவி இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.இம்மன்றம் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட, மாநில அளவில் மற்றும் கோடை காலத்தில்

மதுரை : மதுரை மண்டல கலை பண்பாட்டு மையத்தின் கீழ் இயங்கும் ஜவஹர் சிறுவர் மன்றம், விரிவாக்கம், ஊரக மையங்கள் சார்பில் சிறுவர்கள் ஓவியம், பரதம், குரலிசை, சிலம்பம், கிராமிய நடனம், கீபோர்டு உள்ளிட்ட கலை பயிற்சிகள் பெறலாம். சேர்க்கை கட்டணம் உண்டு எனமைய உதவி இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

இம்மன்றம் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட, மாநில அளவில் மற்றும் கோடை காலத்தில் கலை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இம்மன்றம் மூலம் தேசிய 'பால் பவன்' நடத்தும் இளந்திரு விருதிற்கு போட்டிகள் நடத்தி, வெற்றி பெறும் மாணவர்கள் டில்லியில் நடக்கும் இறுதி போட்டிக்கு அரசு செலவில் அனுப்பி வைக்கப்படுவர்.தற்போது விஸ்வநாதபுரம், ஒத்தக்கடையில் சனி மாலை 4:00 மணி - - 6:00 மணி, -ஞாயிறு காலை 10:00 -- மதியம் 12:00 மணி வரை இம்மன்றம் செயல்படுகிறது என்றார். -தொடர்புக்கு 98425 96563.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X