புதுடில்லி : கிழக்கு லடாக்கில் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண்பது என இந்தியா - சீனா அரசுகள் செய்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய- சீன எல்லை விவகார ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு குழுவின் 23வது குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்கு ஆசியாவிற்கான கூடுதல் செயலர் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.சீனா சார்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திற்கான எல்லைத்துறை இயக்குநர் ஜெனரல் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இரு நாட்டு எல்லையில் மேற்கு பிராந்தியத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலவும் சூழ்நிலை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.கடந்த மாதம் ௧௬ல் இரு நாடுகளின் ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுக்கு பின் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.இதன் அடிப்படையில் கிழக்கு லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் நிலவும் எஞ்சிய பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண்பது என இரு தரப்பும் சம்மதித்தன. எல்லையில் அமைதியான சூழல் நிலவச் செய்வதுடன் எந்தவித அசாம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE