புதுச்சேரி : காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கொட்டிய பேய் மழையால், புதுச்சேரி முழுதும் வெள்ளக்காடானது.
வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, புதுச்சேரியில் நேற்று முன்தினம் மாலை முதல் பரவலாக மழை பெய்ய துவங்கியது. நேற்று காலை 8:30 மணி வரை 5 செ.மீ., மழை பதிவானது.காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக மாறியதை தொடர்ந்து, காலை 8:30 மணி முதல் மழை தீவிரமடைந்தது. பகல் 11:00 மணி முதல் 12:30 மணி வரை பேய் மழை கொட்டியது.
நான்கு மணி நேரத்தில், 13.8 செ.மீ., மழை கொட்டித் தீர்த்தது.நகரின் பிரதான சாலைகளில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால், கார் உள்ளிட்ட வாகனங்கள் தத்தளித்தவாறு சென்றன. வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு கி.மீ., துாரத்திற்கு சாலையில் 2 அடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், அவ்வழியே செல்ல வேண்டிய வாகனங்கள் ஒருவழிப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ரங்கசாமி பார்வையிட்டார். குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE