பொது செய்தி

தமிழ்நாடு

ஜவுளி கடைகள் 2வது நாளாக அடைப்பு

Added : நவ 19, 2021
Share
Advertisement
ஈரோடு: வரலாறு காணாத நூல் விலை உயர்வை கண்டித்து, ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் சார்பில், ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது நாளாக, நேற்றும் கடையடைப்பில் ஈடுபட்டன. இதுகுறித்து அசோசியேசன் தலைவர் கலைச்செல்வன் கூறியதாவது: கடையடைப்பில் ஜவுளி சார்ந்த கடைகள், குடோன்கள், பிற சார்பு தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. ஜவுளி வியாபாரிகள், விசைத்தறியாளர், டையிங், நூல்

ஈரோடு: வரலாறு காணாத நூல் விலை உயர்வை கண்டித்து, ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் சார்பில், ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது நாளாக, நேற்றும் கடையடைப்பில் ஈடுபட்டன. இதுகுறித்து அசோசியேசன் தலைவர் கலைச்செல்வன் கூறியதாவது: கடையடைப்பில் ஜவுளி சார்ந்த கடைகள், குடோன்கள், பிற சார்பு தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. ஜவுளி வியாபாரிகள், விசைத்தறியாளர், டையிங், நூல் வியாபாரிகள், பிளீச்சிங், டையிங் உரிமையாளர்கள், ஸ்கிரீன் பிரிண்டிங், ஜவுளி குடோன் உள்ளிட்ட, 18 வகையான தொழில் அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இரண்டாம் நாளாக, இன்றும் நடக்கும் போராட்டத்தால், 60 கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி தயாரிப்பு, விற்பனை பாதித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜவுளி சார்ந்த இணை சங்கங்கள் கலந்தாலோசித்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்போம். இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X