பொது செய்தி

தமிழ்நாடு

'விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்; குலம் விளங்க விளக்கு வைப்போம்': கார்த்திகை தீபத்தால் விளக்குகள் விற்பனை ஜோர்

Added : நவ 19, 2021
Share
Advertisement
ஈரோடு: திருகார்த்திகை தீபத் திருநாளான இன்று, கோவில், வீடு, அலுவலகங்கள், நிறுவனங்களில் விளக்கேற்றி வழிபாடு நடக்கும். இந்நிலையில் ஈரோட்டில் நேற்று சாலையோர கடைகளில், மண் விளக்குகள் விற்பனை, களை கட்டியது.இதுகுறித்து மொத்த விலைக்கு விற்பனை செய்த பரமேஸ்வரி கூறியதாவது: அந்தியூர், வெப்படை, திருச்செங்கோடு, கரூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து, விளக்குகளை வாங்கி விற்பனை

ஈரோடு: திருகார்த்திகை தீபத் திருநாளான இன்று, கோவில், வீடு, அலுவலகங்கள், நிறுவனங்களில் விளக்கேற்றி வழிபாடு நடக்கும். இந்நிலையில் ஈரோட்டில் நேற்று சாலையோர கடைகளில், மண் விளக்குகள் விற்பனை, களை கட்டியது.


இதுகுறித்து மொத்த விலைக்கு விற்பனை செய்த பரமேஸ்வரி கூறியதாவது: அந்தியூர், வெப்படை, திருச்செங்கோடு, கரூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து, விளக்குகளை வாங்கி விற்பனை செய்கிறோம். இந்தாண்டு அதிக மழையால், மண் விளக்கு தயாரிப்பு பாதித்தது. கடந்தாண்டு, 1,000 மண் விளக்கு கொண்ட ஒரு மூட்டை, 500 ரூபாய்க்கு வாங்கி, 12 விளக்குகளை, 10 ரூபாய்க்கு விற்றோம். தற்போது ஒரு மூட்டை, 650 ரூபாய்க்கு விற்கிறது. ஒரு விளக்கு ஒரு ரூபாய் என்றும், அதிகம் வாங்கினால் கொஞ்சம் விலை குறைத்தும் தருகிறோம். அச்சு விளக்கு, மூன்று முதல், 10 ரூபாய், ஜிகினா விளக்கு, வலம்புரி விளக்கு, 20 ரூபாய், விநாயகர் விளக்கு, சாம்பிராணி விளக்கு, முகப்பு விளக்கு, தூண்டாமணி விளக்கு, சிம்னி விளக்கு, ஒத்துக்குழி விளக்கு என பல வகை விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. பீங்கான் அன்னபறவை விளக்கு, சிறியது, 40 ரூபாய், பெரியது, 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பெண்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X