பொது செய்தி

தமிழ்நாடு

பு.புளியம்பட்டி அருகே வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்

Added : நவ 19, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், விடிய விடிய கொட்டிய கனமழையால், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. புன்செய்புளியம்பட்டி சுற்று வட்டாரத்தில், நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. புளியம்பட்டி அருகே எரங்காட்டுப்பாளையம், காமாட்சி அம்மன் கோவில், அருகில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் வீடுகளை விட்டு

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், விடிய விடிய கொட்டிய கனமழையால், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. புன்செய்புளியம்பட்டி சுற்று வட்டாரத்தில், நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. புளியம்பட்டி அருகே எரங்காட்டுப்பாளையம், காமாட்சி அம்மன் கோவில், அருகில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறி, உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்தனர். அப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கோழிகள், மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன. புளியம்பட்டி, வெங்கநாய்க்கன்பாளையம் காலனியில், இரண்டு வீடுகளின் சுவர், கூரை இடிந்து விழுந்தது. பவானிசாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி, வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


இடிந்தது சுவர், கூரை; தப்பிய குடும்பத்தினர்: காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முழுவதும் கனமழை பெய்தது. அதிகபட்சமாக பவானிசாகரில், 87 மி.மீ., பதிவாகியுள்ளது. கனமழையால் தொட்டம்பாளையத்தில் சவுண்டம்மாள், 70, வீட்டின் சுவர், கூரை இடிந்து விழுந்தது. சவுண்டம்மாள், அவரது மகன்கள், மருமகள் உயிர் தப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X