சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.3 லட்சம் மோசடி: ஈரோட்டை சேர்ந்த இருவர் கைது

Added : நவ 19, 2021
Share
Advertisement
ஈரோடு: நாகர்கோவில் வியாபாரியிடம், மூன்று லட்சம் ரூபாய் மோசடி செய்த, ஈரோட்டை சேர்ந்த இருவரை, போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த இருளப்பபுரத்தை சேர்ந்தவர் தார்வீஸ் மீரான், 39, துணி வியாபாரி. ஈரோட்டுக்கு வந்து துணிகளை மொத்த விலைக்கு கொள்முதல் செய்து வியாபாரம் செய்வது வழக்கம். இதற்காக ஈரோட்டில் தனியார் விடுதியில் வழக்கமாக தங்குவார். ஈரோட்டை

ஈரோடு: நாகர்கோவில் வியாபாரியிடம், மூன்று லட்சம் ரூபாய் மோசடி செய்த, ஈரோட்டை சேர்ந்த இருவரை, போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த இருளப்பபுரத்தை சேர்ந்தவர் தார்வீஸ் மீரான், 39, துணி வியாபாரி. ஈரோட்டுக்கு வந்து துணிகளை மொத்த விலைக்கு கொள்முதல் செய்து வியாபாரம் செய்வது வழக்கம். இதற்காக ஈரோட்டில் தனியார் விடுதியில் வழக்கமாக தங்குவார். ஈரோட்டை சேர்ந்த சலீம் அறிமுகமானார். தன்னிடம் துணிகள் குறைந்த விலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதை நம்பி மூன்று லட்சம் ரூபாய் வரை மீரான் கொடுத்துள்ளார். ஆனால், துணிகளை கொடுக்காமல் மூன்று மாதங்களுக்கும் மேலாக காலம் தாழ்த்தினார். சலீமுக்கு உதவியாக அவரது நண்பர் உமர் செரீப் செயல்பட்டுள்ளார். இருவரும் ஏமாற்றுவதை அறிந்த மீரான், வீரப்பன்சத்திரம் போலீசில் புகாரளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், மேட்டுக்கடையை சேர்ந்த சலீம், 47; ஈரோடு, நாடார்மேட்டை சேர்ந்த உமர் செரீப், 42, ஆகியோரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X