நெடுஞ்சாலையில் விழுந்த கற்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெடுஞ்சாலையில் விழுந்த கற்கள்

Added : நவ 19, 2021
Share
வீரபாண்டி: சேலம் - கோவை நான்கு வழிச் சாலையில், சீரகாபாடியில் இருந்து அரியானூர் வரும் வழியில், அரியானூர் மேம்பாலம் சர்வீஸ் சாலையில் சிறு குன்று உள்ளது. அதன் மேற்பகுதியில், சில குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். தொடர் மழையால் மேம்பால பணிக்கு பாறைகள் வெட்டிய பகுதிகளில், நேற்று காலை மண் சரிவு ஏற்பட்டு கற்கள் சாலையில் உருண்டு விழுந்தன. மழை தொடர்வதால், மீண்டும் மண்

வீரபாண்டி: சேலம் - கோவை நான்கு வழிச் சாலையில், சீரகாபாடியில் இருந்து அரியானூர் வரும் வழியில், அரியானூர் மேம்பாலம் சர்வீஸ் சாலையில் சிறு குன்று உள்ளது. அதன் மேற்பகுதியில், சில குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். தொடர் மழையால் மேம்பால பணிக்கு பாறைகள் வெட்டிய பகுதிகளில், நேற்று காலை மண் சரிவு ஏற்பட்டு கற்கள் சாலையில் உருண்டு விழுந்தன. மழை தொடர்வதால், மீண்டும் மண் சரிவு ஏற்பட்டு, அந்தரத்தில் நிற்கும் கட்டடம் இடிந்து, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X