பொது செய்தி

தமிழ்நாடு

இடைவிடாது பெய்த சாரல் மழை; காய்கறி, பூ வியாபாரிகள் அவதி

Added : நவ 19, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால், பணிக்கு செல்வோர், நடைபாதை வியாபாரிகள் அவதிக்குள்ளாகினர். வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால், நேற்று முன்தினம் முதல் சேலம் மாவட்டத்தில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. ஆத்தூர், வீரகனூர், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பல இடங்களில்

சேலம்: சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால், பணிக்கு செல்வோர், நடைபாதை வியாபாரிகள் அவதிக்குள்ளாகினர். வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால், நேற்று முன்தினம் முதல் சேலம் மாவட்டத்தில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. ஆத்தூர், வீரகனூர், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சேலம் மாநகராட்சி பகுதியில் விடிய விடிய பெய்த மழையால், அஸ்தம்பட்டி, அழகாபுரம், பெரிய புதூர், கிச்சிப்பாளையம், நாராயண நகர், தாதகாப்பட்டி, களரம்பட்டி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து நேற்றிரவு வரை இடைவிடாது சாரல் மழை, அவ்வப்போது சற்றே கனமழையும் பெய்தது. சேலம் மாவட்ட அரசு, தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது. கல்லூரிகள் வழக்கம்போல் செயல்பட்டபோதும் குறைந்த மாணவ, மாணவியரே வந்திருந்தனர். பணிக்கு செல்வோர், நடைபாதையில் கடை வைத்திருந்த காய்கறி, பூ உள்ளிட்ட வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.


நேற்று காலை வரை பதிவான மழையளவு விபரம்: பெத்தநாயக்கன்பாளையம், 56 மி.மீ., ஆத்தூர், 48, தம்மம்பட்டி, 42, கெங்கவல்லி, 40, வீரகனூர், 25, ஆணைமடுவு, 19, ஏற்காடு, 14.8, கரியகோவில், 8, சேலம், 7.6, காடையாம்பட்டி, 6, ஓமலூர், 3, இடைப்பாடி, 2.2, மேட்டூர், 1.4, மொத்தம், 273, சராசரி, 18.20 மி.மீ.,

நிரம்பியது 79 ஏரிகள்: சேலத்தில் தொடர் மழையால், ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் பொதுப்பணித்துறையில், 430 ஏரிகள் உள்ளன. அவற்றில், நேற்று வரை, 79 ஏரிகள் நிரம்பியுள்ளன. பல ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி, அதன் உபரிநீர் சிவதாபுரம் - இளம்பிள்ளை சாலையில் பாய்ந்து, குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால், வாகன ஓட்டிகள், மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

'முன்னுரிமை': கலெக்டர் கார்மேகம், அரசு அலுவலர்களுக்கு பிறப்பித்த உத்தரவு: வருவாய், பொதுப்பணித்துறை இணைந்து, மழை, வெள்ள பாதிப்புகளை தவிர்க்க கவனத்துடன் பணிபுரிய வேண்டும். மோசமான வானிலையால், எந்த உயிரிழப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். மழை பாதிப்பு பணிக்கு முன்னுரிமை கொடுத்து பணிபுரிய வேண்டும்.

பள்ளி, கல்லூரி விடுமுறை: சேலம் மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X