பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு வாரமாக தேக்கி வைக்கப்படுவதால் கரியகோவில் அணை நீர்மட்டம் உயர்வு

Added : நவ 19, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ஒரு வாரமாக தேக்கி வைக்கப்படுவதால், கரியகோவில் அணை நீர்மட்டம், 33 அடியாக உயர்ந்துள்ளது. வாழப்பாடி அருகே, பாப்பநாயக்கன்பட்டியில், 350 ஏக்கரில், 53 அடி உயரத்தில், கரியகோவில் அணை உள்ளது. அதன்மூலம், பாசனம் பெறும் ஏரி, தடுப்பணைகள், மூன்றில் ஒரு பங்கு நிரம்பிய பின், கரியகோவில் அணையில் தண்ணீர் தேக்க, 2018 ஜன., 18ல், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இரு ஆண்டாக பருவமழை

ஆத்தூர்: ஒரு வாரமாக தேக்கி வைக்கப்படுவதால், கரியகோவில் அணை நீர்மட்டம், 33 அடியாக உயர்ந்துள்ளது. வாழப்பாடி அருகே, பாப்பநாயக்கன்பட்டியில், 350 ஏக்கரில், 53 அடி உயரத்தில், கரியகோவில் அணை உள்ளது. அதன்மூலம், பாசனம் பெறும் ஏரி, தடுப்பணைகள், மூன்றில் ஒரு பங்கு நிரம்பிய பின், கரியகோவில் அணையில் தண்ணீர் தேக்க, 2018 ஜன., 18ல், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இரு ஆண்டாக பருவமழை இல்லாததால், அணையில் தண்ணீர் தேக்கி வைக்காமல் திறக்கப்பட்டு வந்தது. ஒரு மாதமாக பெய்து வரும் மழையால், பனைமடல், ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூர் அபிநவம், புத்திரகவுண்டன்பாளையம், பனை ஏரி, கொட்டவாடி தடுப்பணைகள் நிரம்பின. ஆற்றுப்படுகை கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், கடந்த, 13 முதல், அணையில் தண்ணீர் திறக்கப்படாமல் தேக்கி வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று, கரியகோவில் அணை நீர்மட்டம், 33 அடியாக உயர்ந்து, 74 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், அணைக்கு வினாடிக்கு, 108 கன அடி நீர் வருகிறது. ஆறு நாளில் பெய்த மழையால், கரியகோவில் அணை நீர்மட்டம், 33 அடியாக உயர்ந்ததால், பருவ மழையில் முழு கொள்ளளவும் எட்டிவிடும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X