பொது செய்தி

தமிழ்நாடு

'மழையை சமாளிக்க சென்னை தயார்'

Added : நவ 19, 2021
Share
Advertisement
ஓமலூர்: ''சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறினார்.நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, நேற்று முன் தினம் முதல் சேலம் மாவட்ட மக்களிடம் மனுக்களை பெற்று வருகிறார். நேற்று இரண்டாவது நாளாக ஓமலூரில் மனுக்களை பெற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் எவ்வளவு அதிகமாக

ஓமலூர்: ''சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறினார்.


நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, நேற்று முன் தினம் முதல் சேலம் மாவட்ட மக்களிடம் மனுக்களை பெற்று வருகிறார். நேற்று இரண்டாவது நாளாக ஓமலூரில் மனுக்களை பெற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் எவ்வளவு அதிகமாக மழை பெய்தாலும், அதை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. சென்னையில் அனைத்து இடங்களிலும், மோட்டார் பம்பு வைக்கப்பட்டு மழைநீர் விரைவாக அகற்றப்பட்டு வருகிறது. அந்தந்த எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் என, அனைவரும் மழை நீர் அகற்றும் பணியில் பணியாற்றி வருகின்றனர். எனவே எவ்வளவு மழை பெய்தாலும், அதை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; எடுக்கப்படும். 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் கடந்த ஆட்சியில், சில இடங்களில் மட்டுமே வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வடிகால் அமைக்கப்படவில்லை. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையில், ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, சென்னை நகரில் எங்கும் தண்ணீர் தேங்காதவாறு, நிரந்தர தீர்வு காண பணி தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த பணி முடிவடையும் போது, சென்னை மாநகரில் எவ்வித பிரசனையும் இருக்காது. தண்ணீரும் தேங்காது. சேலம் மாவட்டத்தில் கடந்த இரு நாளாக பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. நேற்று முன் தினம் மட்டும், 11 ஆயிரத்து, 500 பேர் மனு கொடுத்துள்ளனர். மனுக்களை அந்தந்த துறை வாரியாக பிரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவ்வாறு அமைச்சர் நேரு தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X