பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.6 கோடியில் நலத்திட்டங்கள் வழங்கிய அமைச்சர்

Added : நவ 19, 2021
Share
Advertisement
ஓமலூர்: தாரமங்கலம், பவளத்தானூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா, நேற்று நடந்தது. அதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, இலங்கை தமிழர் மக்களக்கு, சமையல் பாத்திரம், ஜவுளி, சமையல் எரிவாயு, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிதி, வீடுகள் கட்ட முதல் தவணை நிதி என, 6 கோடியே, 45 லட்சத்து, 90 ஆயிரத்து, 542 ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஓமலூர்: தாரமங்கலம், பவளத்தானூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா, நேற்று நடந்தது. அதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, இலங்கை தமிழர் மக்களக்கு, சமையல் பாத்திரம், ஜவுளி, சமையல் எரிவாயு, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிதி, வீடுகள் கட்ட முதல் தவணை நிதி என, 6 கோடியே, 45 லட்சத்து, 90 ஆயிரத்து, 542 ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின், மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் அம்மாசி, தாரமங்கலம் மேற்கு ஒன்றிய செயலர் ரவிக்குமார், நகர செயலர் குணசேகரன், தாரமங்கலம் ஒன்றிய குழு தலைவர் சுமதிபாபு உள்பட பலர் பங்கேற்றனர். ஓமலூர், வேலாசாமி பள்ளியில் நடந்த முகாமில் மனுக்களை பெற்று, அமைச்சர் நேரு பேசி, வருவாய், வேளாண் துறை சார்பில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலர் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். காடையாம்பட்டி, நடுப்பட்டியில் நடந்த முகாமில், வருவாய்த்துறை சார்பில், 8 லட்சத்து, 32 ஆயிரத்து, 500 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி, வேளாண்துறை சார்பில், தார்பாய், இலவச மரக்கன்று ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார். பின் மக்களிடம் மனுக்களை பெற்று, கலெக்டர் கார்மேகத்திடம் ஒப்படைத்தார். காடையாம்பட்டி தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலர் அறிவழகன், மேற்கு ஒன்றிய செயலர் ரவிச்சந்திரன், நகர செயலர் திருநாவுக்கரசு உள்பட பலர் பங்கேற்றனர். மேற்கண்ட விழாக்களில், சேலம் எம்.பி., பார்த்திபன், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன், சேலம் மேற்கு பொறுப்பாளர் செல்வகணபதி, கிழக்கு பொறுப்பாளர் சிவலிங்கம், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள் பங்கேற்றனர். இடைப்பாடியிலும் அமைச்சர் நேரு மனுக்களை பெற்று, பூலாம்பட்டி பேரூராட்சி அலுவலகம், அங்குள்ள காவிரி ஆற்றில் தண்ணீர் எடுக்கும் இடத்தை பார்வையிட்டார்.


14,625 மனுக்கள் : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தலைமையில் சேலம் மாவட்டத்தில் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று, ஓமலூர், மேட்டூர், காடையாம்பட்டி, இடைப்பாடி, சங்ககிரி தாலுகா பகுதிகளில் முகாம்கள் நடத்தப்பட்டன. அதில், தாலுகா வாரியாக, ஓமலூரில், 3,267 பேர், மேட்டூர், 3,727, காடையாம்பட்டி, 2,523, இடைப்பாடி, 2,656, சங்ககிரி, 2,452 என, 14 ஆயித்து, 625 மனுக்கள் பெறப்பட்டன. அதன் மீது துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X