பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சியில் இன்று சிறப்பு குறைதீர் முகாம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாநகராட்சி பகுதிகளில் இன்று நடக்கும் சிறப்பு குறைதீர் முகாமில், அமைச்சர் நேரு பங்கேற்கிறார். இதுகுறித்து, சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, சேலம் மாவட்டத்தில் சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நடத்தி, மனுக்களை பெற்று வருகிறார். அதன்படி, நவ., 19(இன்று) காலை, 7:00 மணிக்கு, சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டல

சேலம்: சேலம் மாநகராட்சி பகுதிகளில் இன்று நடக்கும் சிறப்பு குறைதீர் முகாமில், அமைச்சர் நேரு பங்கேற்கிறார். இதுகுறித்து, சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, சேலம் மாவட்டத்தில் சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நடத்தி, மனுக்களை பெற்று வருகிறார். அதன்படி, நவ., 19(இன்று) காலை, 7:00 மணிக்கு, சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டல குறைதீர் முகாம், சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் கல்லூரியிலும், 8:00 மணிக்கு, அம்மாபேட்டை மண்டல குறைதீர் கூட்டம், சக்திகைலாஷ் கல்லூரியிலும், 9:00 மணிக்கு, கொண்டலாம்பட்டி மண்டல குறைதீர் முகாம் சவுடேஸ்வரி கல்லூரியிலும், 10:00 மணிக்கு, சூரமங்கலம் மண்டல முகாம், சோனா கல்லூரியிலும் நடக்கிறது. மக்களிடம், அமைச்சரால் பெறப்படும் மனுக்களை முறையாக, குறித்த காலத்துக்குள் முடிவு செய்து, நலத்திட்டம் வழங்க, கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதனால், மக்கள் மனு அளித்து பயன்பெறலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X