பொது செய்தி

தமிழ்நாடு

நகை கடன் தள்ளுபடிக்கு தகுதி பெறாதோர் பட்டியல் வங்கிகளுக்கு அனுப்பி வைப்பு

Added : நவ 19, 2021
Share
Advertisement
சேலம்: தமிழக கூட்டுறவு வங்கிகளில், 5 பவுன் நகைகளுக்கும் குறைவாக அடமானம் வைத்து பெறப்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. அதன்படி, கடனை தள்ளுபடி செய்ய பல வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. கடன் பெற்றவர்களின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டன. அதில், போலி நகைகள் அடமானம் வைத்தவர், அரசு ஊழியர், அவர்களது குடும்பத்தினர், பல்வேறு

சேலம்: தமிழக கூட்டுறவு வங்கிகளில், 5 பவுன் நகைகளுக்கும் குறைவாக அடமானம் வைத்து பெறப்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. அதன்படி, கடனை தள்ளுபடி செய்ய பல வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. கடன் பெற்றவர்களின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டன. அதில், போலி நகைகள் அடமானம் வைத்தவர், அரசு ஊழியர், அவர்களது குடும்பத்தினர், பல்வேறு வங்க?களில் அடமானம் வைத்தவர், வசதி படைத்தவர் உள்ளிட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. கடந்த மார்ச் வரை, 5 பவுனுக்கு உட்பட்டு நகை கடன் பெற்றவர்களின் நிலுவை, 6,000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து தள்ளுபடி பட்டியலில் இருந்து, பெயர் நீக்கப்பட்டவர்களின் பட்டியலை, சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் வங்கி ஊழியர்கள், கடன் தள்ளுபடி ஆகாததால், வட்டி செலுத்த வலியுறுத்தி வருகின்றனர். நேரில் வந்து வாக்குவாதம் செய்பவர்களிடம் அதுகுறித்த ரசீதை காட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X