பொது செய்தி

தமிழ்நாடு

24 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்த மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Added : நவ 19, 2021
Share
Advertisement
தர்மபுரி: காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை, 6:00 முதல் நேற்று காலை, 6:00 மணி வரை விட்டு, விட்டு மழை பெய்தது. காலை, 6:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக அரூரில், 19 மி.மீ., மழை பதிவானது. தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி, 15, பாலக்கோடு, 14, மாரண்டஹள்ளி, 11, தர்மபுரி, பென்னாகரத்தில் தலா, 2 என மொத்தம், 63 மி.மீ., மழை பதிவானது. காலை, 6:00

தர்மபுரி: காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை, 6:00 முதல் நேற்று காலை, 6:00 மணி வரை விட்டு, விட்டு மழை பெய்தது. காலை, 6:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக அரூரில், 19 மி.மீ., மழை பதிவானது. தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி, 15, பாலக்கோடு, 14, மாரண்டஹள்ளி, 11, தர்மபுரி, பென்னாகரத்தில் தலா, 2 என மொத்தம், 63 மி.மீ., மழை பதிவானது. காலை, 6:00 மணிக்கு மேல் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால், பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்தது. காலை முதல் தொடர்ந்து பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று மாலை, 4:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக அரூரில், 15 மி.மீ., பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரத்தில் தலா, 14, பாலக்கோடு, 13.2, தர்மபுரி, 10, மாரண்டஹள்ளி, 6, ஒகேனக்கல்லில், 5.30 மி.மீ., என, மொத்தம், 77.50 மி.மீ., மழை பதிவானது. நேற்று மாலை, 4:00 மணிக்கு மேல், மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. மாலை, 6:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலக்கோட்டில், 65.2 மி.மீ., மழை பதிவானது. பாப்பிரெட்டிப்பட்டி, அரூரில் தலா, 49, தர்மபுரி, 33, பென்னாகரம், 30, மாரண்டஹள்ளி, 27, ஒகேனக்கல், 9.6 என மாவட்டத்தில் மொத்தம், 262.8 மி.மீ., மழை பதிவானது.

* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி பாரூரில், 37.4 மி.மீ., மழை பதிவாகியது. அதேபோல், போச்சம்பள்ளி, 36.1, பெனுகொண்டாபுரம், 34.6, ஊத்தங்கரை, 27, நெடுங்கல், 16.2, கிருஷ்ணகிரி, 9.9, அஞ்செட்டி, 6.4, ராயக்கோட்டை, 6, சூளகிரி, 4, ஓசூர், 4, என மொத்தம், 181.6 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X