பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டியில் பெய்து வரும் தொடர் மழையால், நேற்று காலை பொம்மிடி அருகே தென் சந்தையூரில் அமீனா, துரிஞ்சிப்பட்டி, இந்திரா நகரில் முனுசாமி, வெங்கடசமுத்திரத்தில் வனரோஜா, பொ.மல்லாபுரம் வினோபாஜி தெருவில் நாகராஜ், மெணசியில் ராஜாத்தி, கொக்கராப்பட்டியில் செந்தில் ஆகியோர் வீடுகளின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில் உயிர்சேதம் ஏதும் இல்லை. தகவலின்படி வி.ஏ.ஓ.,க்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர். இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் சுப்பிரமணி நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதேபோன்று மோளையானூர், தென்கரைகோட்டை கோபிநாதம்பட்டி ரோடு, கடத்தூர்புட்டிரெட்டிப்பட்டி ரோடு ஆகிய பகுதிகளில், மூன்று புளிய மரங்கள் மழைக்கு சாய்ந்து விழுந்தது. இதை, நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.
* அரூர் அருகே, டி.அம்மாபேட்டையை சேர்ந்த சுகந்தி என்பவரது ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. அதேபோல், இட்லப்பட்டி சேகர், மொரப்பூர் அடுத்த சுண்டக்காப்பட்டி அழகி ஆகியோரது ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவர்கள் இடிந்து சேதமடைந்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE