பொது செய்தி

தமிழ்நாடு

கைதான அ.தி.மு.க., பிரமுகர் மருத்துவமனையில் அனுமதி

Added : நவ 19, 2021
Share
Advertisement
பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த ஜெல்மாரம்பட்டியை சேர்ந்த தொழிலாளிகள் முத்துவேல், 36, சுரேஷ், 32, ஆகியோரை கடத்தி தாக்கியதாக, தர்மபுரி மாவட்ட ஆவின் தலைவரும், அ.தி.மு.க., மாநில விவசாய அணி தலைவருமான டி.ஆர்.அன்பழகன், 58, பென்னாகரம் போலீசாரால் கைதானார். அவருடன் தாளப்பள்ளத்தை சேர்ந்த முருகன், 38, கொட்லுமாரம்பட்டியை சேர்ந்த மகேந்திரன், 32, ஆகியோரும் கைதாகினர். அவர்க?ளை பென்னாகரம் அரசு

பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த ஜெல்மாரம்பட்டியை சேர்ந்த தொழிலாளிகள் முத்துவேல், 36, சுரேஷ், 32, ஆகியோரை கடத்தி தாக்கியதாக, தர்மபுரி மாவட்ட ஆவின் தலைவரும், அ.தி.மு.க., மாநில விவசாய அணி தலைவருமான டி.ஆர்.அன்பழகன், 58, பென்னாகரம் போலீசாரால் கைதானார். அவருடன் தாளப்பள்ளத்தை சேர்ந்த முருகன், 38, கொட்லுமாரம்பட்டியை சேர்ந்த மகேந்திரன், 32, ஆகியோரும் கைதாகினர். அவர்க?ளை பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அன்பழகனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். அங்கு நேற்று, தர்மபுரி முதன்மை நீதிபதி விசாரணை நடத்தி அவரை, 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் அன்பழகன், நேற்று சேலம் மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X