தடுப்பணைகளில் வெள்ளப்பெருக்கு

Added : நவ 19, 2021
Advertisement
அரூர்: அரூர் அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு தடுப்பணை, தொடர்மழையால் கடந்த, 12ல் நிரம்பியது. அதிலிருந்து, பழைய ஆயக்காட்டு வழியாக உபரிநீர் செல்கிறது. அதேபோல், கே.ஈச்சம்பாடி தடுப்பணை நிரம்பியதையடுத்து, கடந்த மாதம், 24ல் தடுப்பணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், தொடர்மழையால் நேற்று முன்தினம் வரட்டாறு தடுப்பணைக்கு, 78 கன அடியாக இருந்த நீர்வரத்து,

அரூர்: அரூர் அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு தடுப்பணை, தொடர்மழையால் கடந்த, 12ல் நிரம்பியது. அதிலிருந்து, பழைய ஆயக்காட்டு வழியாக உபரிநீர் செல்கிறது. அதேபோல், கே.ஈச்சம்பாடி தடுப்பணை நிரம்பியதையடுத்து, கடந்த மாதம், 24ல் தடுப்பணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், தொடர்மழையால் நேற்று முன்தினம் வரட்டாறு தடுப்பணைக்கு, 78 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 80 கன அடியாக அதிகரித்தது. அதேபோல், கே.ஈச்சம்பாடி தடுப்பணைக்கு நேற்று, 1,615 கன அடி நீர்வரத்து வந்தது. இதனால், தென்பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நரிப்பள்ளி கல்லாறு, வாணியாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், எல்லப்புடையாம்பட்டி, மாவேரிப்பட்டி, சங்கிலிவாடி, செல்லம்பட்டி ஏரிகள் ஏற்கனவே நிரம்பிய நிலையில், மீதமுள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X