பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவுத்துறை சார்பாக 1,127 பேருக்கு கடனுதவி

Added : நவ 19, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரியில் நேற்று, 68வது கூட்டுறவு வாரவிழா மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் நடந்தது. இதில், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது: கூட்டுறவு சங்கங்கள் மூலம், 2021-2022ம் ஆண்டில், அக்., வரை, 9,286 விவசாயிகளுக்கு, 64 கோடியே, 82 லட்ச ரூபாய் பயிர்கடனாக வழங்கப்பட்டுள்ளது. 18 ஆயிரத்து, 754 பேருக்கு, 212 கோடியே, 68 லட்ச ரூபாய் இதர கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில்

தர்மபுரி: தர்மபுரியில் நேற்று, 68வது கூட்டுறவு வாரவிழா மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் நடந்தது. இதில், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது: கூட்டுறவு சங்கங்கள் மூலம், 2021-2022ம் ஆண்டில், அக்., வரை, 9,286 விவசாயிகளுக்கு, 64 கோடியே, 82 லட்ச ரூபாய் பயிர்கடனாக வழங்கப்பட்டுள்ளது. 18 ஆயிரத்து, 754 பேருக்கு, 212 கோடியே, 68 லட்ச ரூபாய் இதர கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வறட்சியான பகுதிகளை பசுமையாக மாற்றுவதற்கு காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அமைச்சர், 1,127 பயனாளிகளுக்கு, ஆறு கோடியே, 99 லட்சத்து, 41 ஆயிரத்து, 852 ரூபாய் மதிப்பில் கடனுதவி வழங்கினார். இதில், பா.ம.க.,எம்.எல்.ஏ.,க்கள் ஜி.கே.மணி(பென்னாகரம்), வெங்கடேஷ்வரன்(தர்மபுரி), கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X