பொது செய்தி

தமிழ்நாடு

ஜெய்பீம் பட விவகாரம்: நடிகர் சூர்யா மீது போலீசில் புகார்

Added : நவ 19, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: ஓசூரில், பா.ம.க., மாவட்ட செயலாளர் கோவிந்தராஜன், வன்னிய சங்க செயலாளர் கணேசன் தலைமையில், பா.ம.க., நிர்வாகிகள் பலர், ஓசூர் போலீஸ் ஸ்டேஷனில், ஜெய்பீம் படக்குழுவினருக்கு எதிராக புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், அவர்கள் தெரிவித்துள்ளதாவது: ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகம் குறித்து அவதூறான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. வன்னிய சமூகத்தினரின் எண்ணங்களை

கிருஷ்ணகிரி: ஓசூரில், பா.ம.க., மாவட்ட செயலாளர் கோவிந்தராஜன், வன்னிய சங்க செயலாளர் கணேசன் தலைமையில், பா.ம.க., நிர்வாகிகள் பலர், ஓசூர் போலீஸ் ஸ்டேஷனில், ஜெய்பீம் படக்குழுவினருக்கு எதிராக புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், அவர்கள் தெரிவித்துள்ளதாவது: ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகம் குறித்து அவதூறான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. வன்னிய சமூகத்தினரின் எண்ணங்களை புண்படுத்தும் விதமாக அவதூறான காட்சிகள் அமைந்துள்ளது. எனவே, படத்தின் இயக்குனர் ஞானவேல், தயாரிப்பாளர் ஜோதிகா, நடிகர் சூர்யா ஆகியோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மனு அளித்தபோது, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைத்தலைவர், வழக்கறிஞர் கதிரவன், சிறுபான்மை மாவட்ட தலைவர் காதர் பாஷா, மாவட்ட துணைத்தலைவர் சொக்கலிங்கம், உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதேபோல், ஊத்தங்கரையிலும் பா.ம.க.,வினர் மனு கொடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X