ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை

Added : நவ 19, 2021
Share
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை, காமகிரியை சேர்ந்த வீரபத்திரன் என்பவரின் மனைவி மகேஸ்வரி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்று முன்தினம் மாலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, 108 அவசர கால ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்சை சுரேஷ் ஓட்டினார். மருத்துவ உதவியாளராக ரகுபதி வந்தார். காமகிரி வந்ததும் பிரசவ வலியால் துடித்த மகேஸ்வரியை ஆம்புலன்சில் உனிசெட்டி அரசு ஆரம்ப

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை, காமகிரியை சேர்ந்த வீரபத்திரன் என்பவரின் மனைவி மகேஸ்வரி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்று முன்தினம் மாலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, 108 அவசர கால ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்சை சுரேஷ் ஓட்டினார். மருத்துவ உதவியாளராக ரகுபதி வந்தார். காமகிரி வந்ததும் பிரசவ வலியால் துடித்த மகேஸ்வரியை ஆம்புலன்சில் உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியில் பிரசவமாகும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டு, டிரைவர் சுரேஷ் உதவியுடன், மருத்துவ உதவியாளர் ரகுபதி பிரசவம் பார்த்தார். மாலை, 6:10 மணிக்கு மகேஸ்வரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன் உள்ளனர். இருந்தாலும் தொற்று மற்றும் பராமரிப்புக்காக தாய், சேய் இருவரும் உனிசெட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நடுவழியில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் ரகுபதி மற்றும் டிரைவர் சுரேசை மகேஸ்வரியின் உறவினர்கள் பாராட்டினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X