மழையால் மரம், மின்கம்பங்கள் சாய்ந்தன; பல இடங்களில் வெள்ளப்பெருக்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் மரம், மின்கம்பங்கள் சாய்ந்தன; பல இடங்களில் வெள்ளப்பெருக்கு

Added : நவ 19, 2021
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்கிறது. இதனால், கிருஷ்ணகிரி - வேப்பனஹள்ளி சாலையில் நேற்று மாலை புளிய மரம் ஒன்று வேறுடன் சாய்ந்தது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இதேபோல் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் பகுதியில் மரங்கள் சாய்ந்தன. மழையால் மேலுமலையில் மூன்று மின்கம்பங்கள் சாலையில் சாய்ந்தன. கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்கிறது. இதனால், கிருஷ்ணகிரி - வேப்பனஹள்ளி சாலையில் நேற்று மாலை புளிய மரம் ஒன்று வேறுடன் சாய்ந்தது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இதேபோல் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் பகுதியில் மரங்கள் சாய்ந்தன. மழையால் மேலுமலையில் மூன்று மின்கம்பங்கள் சாலையில் சாய்ந்தன. கிருஷ்ணகிரி தண்டேகுப்பம் பின்புறம் டைட்டான் நகரில் மழை வெள்ளத்தால் குடியிருப்பு முழுவதும் தண்ணீர் தேங்கி மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி பழையபேட்டை டவுன் பஸ் ஸ்டாண்ட் முழுவதும் ஒரு அடி உயரத்திற்கு மழை நீருடன் கழிவுநீரும் தேங்கி நின்றது. கிருஷ்ணகிரி செட்டியம்பட்டியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ஊத்தங்கரை ஒன்றியம் கொம்மம்பட்டு அருகே பாம்பாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சிங்காரப்பேட்டை அடுத்த அத்திப்பாடி கிராமத்தில், பலத்த மழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊத்தங்கரை - நீப்பந்துரை செல்லும் சாலையில், 2ம் எண் அரசு டவுன் பஸ் ஒன்று சாய்ந்து விபத்துக்குள்ளானது. போச்சம்பள்ளி அடுத்த நாகலேரி நிரம்பி உபரிநீர் வெளியேறியதால், அகரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் நீரில் மூழ்கியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X