" ஆணவம் அடிபணிந்தது "- ராகுல்; " அறப்போராட்டத்திற்கு வெற்றி "- ஸ்டாலின்

Updated : நவ 20, 2021 | Added : நவ 19, 2021 | கருத்துகள் (111)
Share
Advertisement
புதுடில்லி: வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை அடுத்து, விவசாயிகளின் சத்தியாகிரக போராட்டத்தால ஆணவம் வீழ்த்தப்பட்டது என்று காங்., எம்.பி., ராகுல் கூறியுள்ளார். இது போல் தமிழக முதல்வர் ஸ்டாலின் இது அறப்பபோராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும், பிரதமர் முடிவை வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து

புதுடில்லி: வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை அடுத்து, விவசாயிகளின் சத்தியாகிரக போராட்டத்தால ஆணவம் வீழ்த்தப்பட்டது என்று காங்., எம்.பி., ராகுல் கூறியுள்ளார். இது போல் தமிழக முதல்வர் ஸ்டாலின் இது அறப்பபோராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும், பிரதமர் முடிவை வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.latest tamil newsமத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி இன்று (நவ.,19) அறிவித்துள்ளார். வரும் பார்லி குளிர்கால கூட்டத்தொடரில் இந்த வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா


வேளாண் சட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடியின் அறிவிப்பு வரவேற்புக்குரியது. இது அரசியல்வாதி போன்ற முடிவு. பிரதமர் மோடி, தனது பேச்சின் போது, இந்தியா தொடர்ந்து விவசாயிகளுக்கு சேவையாற்றும். அவர்களின் வளர்ச்சிக்கு எப்போதும் ஆதரவு அளிக்கும் என்றார். ஒவ்வொரு இந்தியரின் நலனை தவிர வேறு சிந்தனை இல்லை என்பதையே இது காட்டுகிறது. பிரதமர் மோடி தனது அபாரமான அரசியல் திறனை வெளிப்படுத்தி விட்டார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா


விவசாயிகளின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. நீதிக்கான இந்த போராட்டத்தில், 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகத்திற்கு இன்று நீதி கிடைத்துள்ளது. இன்று, உண்மை, நீதி, அகிம்சை வெற்றி பெற்றுள்ளது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிராக சதி செய்த ஆட்சியாளர்கள் தோல்வியடைந்துள்ளனர். விவசாயம் மற்றும் வாழ்வாதாரம் மீது தாக்குதல் நடத்த முயன்ற சதி தோற்கடிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வெற்றி பெற்றுள்ளனர். ஜனநாயகத்தில் எந்த முடிவு எடுத்தாலும், அது சம்பந்தப்பட்ட அனைவர் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தி எடுக்கப்பட வேண்டும். மோடி அரசு சில பாடங்களை படித்திருக்கும் என நம்புகிறேன்.
ராகுல், காங்கிரஸ்


நாட்டிற்கு உணவளிக்கும் விவசாயிகளின் சத்யாகிரக போராட்டத்திற்கு ஆணவம் அடிபணிந்தது. அநீதிக்கு எதிரான வெற்றிக்கு வாழ்த்துக்கள். நான் ஏற்கனவே மத்திய அரசு திரும்ப பெறும் என கூறியதையும் நினைவுப்படுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.


latest tamil news
ராகேஷ் திகாயத், பாரதிய கிஷான் சங்கத்தலைவர்:


போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம். பார்லிமென்டில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் நாளுக்காகக் காத்திருக்கிறோம். குறைந்தபட்ச ஆதார விலை தவிர விவசாயிகளின் மற்ற பிரச்னைகள் குறித்தும் அரசு பேச வேண்டும்.


மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ்:


இது வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி. இந்த போராட்டத்தால் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். விவசாயிகள் படும் கஷ்டங்களுக்கு யார் பொறுப்பேற்பார்கள்? பார்லிமென்டில் இந்த பிரச்னைகளை எழுப்புவோம்.


மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் பாட்டீல்:


latest tamil newsஇந்த முடிவை முன்பே எடுத்திருந்தால் இவ்வளவு விவசாயிகள் இறந்திருக்க மாட்டார்கள். அரசாங்கம் முன்னதாகவே பேச்சுவார்த்தைகளை துவங்கியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. விவசாயிகள் தெருக்களில் இறங்கி போராடியதால், அவர்களின் கோரிக்கை இன்று நிறைவேறியுள்ளது. இது விவசாயிகளின் வெற்றி.


சிதம்பரம், காங்கிரஸ்:


ஜனநாயக போராட்டங்களால் சாதிக்க முடியாததை, வரவிருக்கும் தேர்தல்களுக்கு பயந்து சாதிக்க முடிந்துள்ளது. மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது குறித்த பிரதமரின் அறிவிப்பு கொள்கை மாற்றத்தினாலோ அல்லது மனமாற்றத்தினாலோ செய்யவில்லை. தேர்தல் பயத்தால் ரத்து செய்துள்ளார். எப்படியோ, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.


பஞ்சாப் துணை முதல்வர் எஸ்.எஸ்.ரந்தாவா:


விவசாயிகள் 11 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 700 விவசாயிகள் உயிரிழந்தனர். தாமதமாக முடிவெடுத்திருந்தால் நல்ல முடிவு. மத்திய அரசு தனது தவறை ஏற்று விவசாய சட்டங்களை ரத்து செய்ததை நான் வரவேற்கிறேன். பஞ்சாப் அரசு செய்தது போல், உயிரிழந்த 700 குடும்பங்களுக்கும் மத்திய அரசு உதவ வேண்டும்.


ஸ்டாலின், தமிழக முதல்வர்:


மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம். உழவர் பக்கம் நின்று போராடியதும், வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமை கொள்ளத்தக்கதாகும். அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா காந்தியின் மண் என்று உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்!


பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.,:


விவசாயிகளின் நீண்டகால பிரச்னையை தீர்க்கவே பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை கொண்டுவந்தார்.


கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூ.,:


போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி; தாமதமான முடிவு என்றாலும் வரவேற்கத்தக்க அறிவிப்பு.


திருமாவளவன், விசிக:


தாமதமான முடிவு என்றாலும் ஓராண்டாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.


வைகோ, மதிமுக.,:


மக்கள் சக்தியே மகேசன் சக்தி என்பதை உணர்ந்து மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.


செம்மலை, அதிமுக:


மூன்று வேளாண் சட்டங்களிலும் தேவையெனில் திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினோம். விவசாயிகளின் கோரிக்கைக்கு மதிப்பளித்து பிரதமர் அறிவித்துள்ளார்.


கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ்:


இடைத்தேர்தல்களுக்கு முன்பாகவே இதனை ரத்து செய்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்த பிறகு இந்த முடிவு எடுத்துள்ளது மத்திய அரசின் சந்தர்ப்பவாதத்தையே காட்டுகிறது. விவசாயிகள் இதனை ஏற்கமாட்டார்கள்.


latest tamil news
காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா


தேர்தல் நெருங்கி வருகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ளாமல் இல்லை. சூழ்நிலை சரியாக இல்லை என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். கருத்துக்கணிப்பு மூலமும் தெரிந்து கொண்டுள்ளனர். இதற்காக தேர்தலுக்கு முன்பு மன்னிப்பு கேட்பதற்கு முன்வந்துள்ளனர். விவசாயிகள் கொலை, தடியடி, கைத ஆகியவற்றை செய்தது யார். உங்களது அரசு தான் செய்தது. இன்று நீங்கள் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறுவதாக நீங்கள் கூறுகிறீர்கள். உங்களை எப்படி அவர்கள் நம்புவார்கள். நாட்டில், விவசாயிகளை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதை அரசு புரிந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.


டில்லி முதல்வர் கெஜ்ரிவால்


சுதந்திர தினம், குடியரசு தினம் போன்று இன்றைய நாள் வரலாற்றில் குறித்து வைக்கப்படும். விவசாயிகளுக்கு மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை சீர்குலைக்க அனைத்து விஷயங்களையும் மத்திய அரசு செய்தது. ஆனால், விவசாயிகள் போராட்டத்தை கைவிட வில்லை.


ஹரியானா துணை முதல்வர்


வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது என்ற மத்திய அரசின் முடிவை வரவேற்கிறோம். சமூகத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும். போராட்டத்தை முடித்து கொள்ள வேண்டும் என்று விவசாய சங்கத்தினரை கேட்டு கொள்கிறோம். விவசாயிகளின் நலனுக்கு தொடர்ந்து முயற்சி செய்வோம்.


ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்


நாடு மற்றும் விவசாயிகளின் நலன் கருதி, வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். விவசாயிகள் மற்றும் குடும்பத்தினர், இதற்காக நீண்ட நாட்கள் காத்திருந்தனர். இதனை மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். விவசாயிகளுக்கு எப்போதும் பீஜூ ஜனதா தளம் ஆதரவாக இருக்கும்.


ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்


நாட்டில் நிலவும் சூழல் காரணமாக 3 சட்டங்களையும் திரும்ப பெற வேண்டிய சூழல் பிரதமருக்கு ஏற்பட்டது. உ.பி., தேர்தலை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பிரதமரும், பா.ஜ.,வும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல்


விவசாயிகள் வெற்றி பெற்றுள்ளனர். அராஜகம் தோல்வி அடைந்துள்ளது. பயங்கரவாதிகள், சீனா- பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என அழைக்கப்பட்ட விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி. நாட்டுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் மோடியும், பா.ஜ.,வும் மன்னிப்பு கேட்க வேண்டும்.


கேரள முதல்வர் பினராயி விஜயன்


வேளாண் சட்டங்கள் திரும்ப பெற்றது. விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. பல்வேறு சவால்களுக்கு மத்தியில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்


பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி


வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது என்ற முடிவை முன்னரே எடுத்திருக்க வேண்டும். குறைந்த பட்ச ஆதார விலைக்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக சட்டம் கொண்டு வர வேண்டும் என வரும் குளிர்கால பார்லிமென்ட் கூட்டத்தொடரில் வலியுறுத்துவோம்.
இவ்வாறு தலைவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (111)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
20-நவ-202110:59:59 IST Report Abuse
Kumar தேசத்தின் பாதுகாப்பை முன்னிட்டு ,அந்த மூன்று சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டன. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
20-நவ-202108:05:02 IST Report Abuse
அப்புசாமி போராட்டம் நடத்த வெளிநாட்டிலிருந்து பணம் வருதுன்னு புதுசா ஒரு பிட்டப் போடுறாங்க. டிஜிட்டல் இந்தியா ஆளுங்கலால் இந்தப் பணப் பரிமாற்றத்தைக் கண்டு பிடிக்க முடியாதா?
Rate this:
Cancel
 கு.ரா.பிரேம் குமார் பெங்களூர் தெளிவான சட்டங்களை புரியாதது மாறி நடித்து எதிர்ப்பவர்கள், தூங்குவதை போல் பாவனை செய்பவர்களுக்கு சமமானவர்கள். அத்தகையோரின் பின்னால் போவதைவிட, விவசாயிகளையும் நாட்டை முன்னேற்ற பாதையில் உடன் அழைத்து செல்லவும், எதிர்கட்சிகளின் தவறான பாதையிலிருந்து அவர்களை தடுத்து நிறுத்தவும், வேறு மார்க்கம் இல்லாத காரணத்தால் தான் பிரதமர் மூன்று விவசாய சட்டங்களை, தடித்த மனதுடன் விலக்கி கொள்ள முடிவெடுத்தார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X