வேலூர் அருகே வீடு இடிந்து 9 பேர் பலி; ரூ.5 லட்சம் முதல்வர் நிவாரணம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலூர் அருகே வீடு இடிந்து 9 பேர் பலி; ரூ.5 லட்சம் முதல்வர் நிவாரணம்

Updated : நவ 19, 2021 | Added : நவ 19, 2021 | கருத்துகள் (7)
Share
வேலூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் வீடு இடிந்து 9 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பேரணாம்பட்டு பகுதியில் நேற்றிரவு (நவ.,18) தொடர்ந்து மழை பெய்தது. இதில், மழை காரணமாக அஜித்தா தெருவில் உள்ள இரு குடும்பத்தினர் ஒரே மாடி
வேலூர் அருகே வீடு இடிந்து 9 பேர் பலி; ரூ.5 லட்சம் முதல்வர் நிவாரணம்

வேலூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் வீடு இடிந்து 9 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பேரணாம்பட்டு பகுதியில் நேற்றிரவு (நவ.,18) தொடர்ந்து மழை பெய்தது. இதில், மழை காரணமாக அஜித்தா தெருவில் உள்ள இரு குடும்பத்தினர் ஒரே மாடி வீட்டில் தங்கியுள்ளனர். மழையால், இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 4 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 9 பேர் பலியாகினர்.


latest tamil news


கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். மீட்கப்பட்டவர்கள் பேரணாம்பட்டு, குடியாத்தம், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல பாண்டியன் மற்றும் வருவாய் துறையினர் மற்றும் போலீசார் மீட்பு பணியை ஆய்வு செய்தனர். இந்த கோர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news



நிவாரணம்


இந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், படுகாயங்கமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X