பொது செய்தி

இந்தியா

580 ஆண்டுகளுக்குப் பிறகு நீண்ட சந்திர கிரகணம்; இன்று தோன்றுகிறது

Updated : நவ 19, 2021 | Added : நவ 19, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: கடந்த 580 ஆண்டுகளில் தோன்றக்கூடிய உலகின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று (நவ.,19) வானில் தோன்றுகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒருசில பகுதிகளில் மட்டும் இதை காணலாம் எனக் கூறப்படுகிறது.சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. பொதுவாக ஆண்டுக்கு சராசரியாக 4 கிரகணங்கள் நிகழ்கின்றன. பூமியின் நிழல் சந்திரனை
Lunar Eclipse 2021, Longest, Chandra Grahan, சந்திர கிரகணம், நீண்ட கிரகணம்

புதுடில்லி: கடந்த 580 ஆண்டுகளில் தோன்றக்கூடிய உலகின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று (நவ.,19) வானில் தோன்றுகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒருசில பகுதிகளில் மட்டும் இதை காணலாம் எனக் கூறப்படுகிறது.

சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. பொதுவாக ஆண்டுக்கு சராசரியாக 4 கிரகணங்கள் நிகழ்கின்றன. பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் சந்திர கிரகணமும், நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரிய கிரகணமும் உருவாகின்றன. அந்த வகையில், இன்று உலகின் மிக நீண்ட சந்திர கிரகணம் தோன்றுகிறது. சுமார் 580 ஆண்டுகளுக்கு பிறகு 6 மணிநேரத்திற்கு மேலாக தோன்றும் இந்த நீண்ட சந்திர கிரகணம், அடுத்ததாக 2669ம் ஆண்டில் தான் நிகழும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இன்று காலை 11:32 மணி முதல் மாலை 05:34 மணிவரை தோன்றும் இந்த சந்திர கிரகணம், வடகிழக்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியா, பசிபிக் பெருங்கடல் பகுதிகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் சந்திர கிரகணத்தை மக்கள் பார்க்கலாம். இந்தியாவை பொறுத்தவரையில் அருணாச்சல் பிரதேசம், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு பகுதிகளில் சிறிது நேரம் மட்டும் காண முடியும் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தில் தெரியாது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
19-நவ-202115:51:23 IST Report Abuse
Visu Iyer ராசிபலன் மாதபிறப்பு கிரக பெயர்ச்சி என்று சோதிடம் சொல்லும் சோதிடர்கள் என கிரகணதிற்கு சோதிடம் சொல்வதில்லை.. என்று எப்போதாவது யோசித்து பார்த்தது உண்டா?
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
19-நவ-202115:50:19 IST Report Abuse
Visu Iyer இதனால், அரசியல் தலைவர்களுக்கு பிரச்சனை இருக்க வாய்ப்பு உண்டு என்பது சோதிட குறிப்பு.. பொறுத்து இருந்து பார்க்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X