பார்லி.,யில் சட்டங்களை வாபஸ் பெறும்வரை போராட்டம் தொடரும்: விவசாய சங்கத் தலைவர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பார்லி.,யில் சட்டங்களை வாபஸ் பெறும்வரை போராட்டம் தொடரும்: விவசாய சங்கத் தலைவர்

Updated : நவ 19, 2021 | Added : நவ 19, 2021 | கருத்துகள் (28)
Share
புதுடில்லி: பார்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும் என விவசாய சங்கத்தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி இன்று (நவ.,19) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாகவும், வரவிருக்கும் பார்லி., கூட்டத்தொடரில் இந்த சட்டங்கள் திரும்ப பெறும் நடவடிக்கை எடுக்கப்படும்
FarmLaws, Farmers Protest, Rakesh Tikait, BKU, Continue, வேளாண் சட்டங்கள், விவசாயிகள்,  போராட்டம், ராகேஷ் திகாயத்,

புதுடில்லி: பார்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும் என விவசாய சங்கத்தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இன்று (நவ.,19) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாகவும், வரவிருக்கும் பார்லி., கூட்டத்தொடரில் இந்த சட்டங்கள் திரும்ப பெறும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியதுடன், விவசாயிகள் போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார். வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர். டில்லி எல்லையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினர்.


latest tamil news


இந்நிலையில், போராட்டத்தை தொடர்வது குறித்து பாரதிய கிஷான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் கூறியதாவது: பார்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும். குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். இது விவசாயிகளின் வெற்றி. இந்த போராட்டத்தில் உயிரிழந்த 750க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கும், போராட்டத்தில் பங்கேற்ற பழங்குடியினர், தொழிலாளர்கள், பெண்களுக்கு இந்த வெற்றியை சமர்பிக்கிறோம். மோடி அரசின் பிம்பம் சரிந்ததால், இந்த அறிவிப்பு தேர்தல் வித்தையாகவே பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X