கிருஷ்ணகிரி, திருப்பூரில் மிக கனமழை பெய்யலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி, திருப்பூரில் மிக கனமழை பெய்யலாம்

Updated : நவ 19, 2021 | Added : நவ 19, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை: கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது: வட தமிழகத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரங்களில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக
rain, thiruppur, krishnagiri,

சென்னை: கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது: வட தமிழகத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரங்களில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும்.

இதனால், அடுத்த 24 மணி நேரத்தில், ஈரோடு, சேலம், தர்மபுரி, வேலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், வட மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளது.


latest tamil news



சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியசும், குறைந்த பட்சமாக 24 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 5 இடங்களில் அதிகனமழையும், 37 இடங்களில் மிக கனமழையும், 64 இடங்களின் கனமழையும் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 22 செ.மீ., மழைப்பதிவாகி உள்ளது. இவ்வாறு புவியரசன் கூறினார்.

வட தமிழக கடலோரம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும். இன்று(நவ.,19) மாலை வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X