கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஏன் ஹிந்தி மொழியை கற்க கூடாது?: உயர்நீதிமன்ற மதுரை கிளை

Updated : நவ 19, 2021 | Added : நவ 19, 2021 | கருத்துகள் (58)
Share
Advertisement
மதுரை: ஏன் ஹிந்தி மொழியை கற்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'மத்திய அரசு தனது திட்டங்களை செயல்படுத்தும் போது ஹிந்தியில் தான் பெயர் வைக்கிறார்கள். அந்த திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தும் போது தமிழக அரசின் அரசாணை,
MaduraiHC, Language, Hindi, மதுரை, உயர்நீதிமன்றம், மதுரைக்கிளை, ஹிந்தி, மொழி

மதுரை: ஏன் ஹிந்தி மொழியை கற்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'மத்திய அரசு தனது திட்டங்களை செயல்படுத்தும் போது ஹிந்தியில் தான் பெயர் வைக்கிறார்கள். அந்த திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தும் போது தமிழக அரசின் அரசாணை, விளம்பரங்கள் மற்றும் செய்தி குறிப்புகளில் மேற்படி ஹிந்தி வார்த்தைகளில் உள்ள திட்டங்களை அப்படியே தமிழ் மொழியில் எழுதுகிறார்கள். இவ்வாறு தமிழில் எழுதுவதால் தமிழர்களுக்கு அதன் அர்த்தம் புரிவதில்லை. தமிழகத்தில் அமல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களை தமிழில் மொழி பெயர்த்து அறிவிக்க வேண்டும்,' எனக் குறிப்பிட்டிருந்தார்.


latest tamil news



இந்த மனு இன்று (நவ.,19) நீதிபதிகள் புஷ்பா சத்திய நாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'ஏன் ஹிந்தி மொழியை கற்க கூடாது?. ஒரு மொழியை கற்பது பிறருடன் தொடர்பு கொள்ளத்தான். மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கானது. மொழியை, மொழியாக கையாள வேண்டும்,' எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
20-நவ-202110:57:04 IST Report Abuse
Kumar ஊருக்கு,ஊரு அரபி கல்லூரி வைத்து அரபி மட்டும் படிக்கலாம். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
சாந்தகுமார் - Alangulam,இந்தியா
20-நவ-202109:42:05 IST Report Abuse
சாந்தகுமார் தேவை இருந்தால் படிக்கலாம் தமிழ்நாட்டில் வாழ தமிழ் போதுமானது. அறிவியல் பாடங்களும் மருத்துவ பாடங்களும் தமிழில் நடத்தப்பட்டால் ஆங்கிலமும் தேவை இல்லை. அனைத்து அறிவியல் சம்பந்தமான நூல்கள் தமிழில் மொழிபெயர்த்தால் மாணவர்கள் எழிதில் புரிந்து கொள்வார்கள் அதை செய்ய எந்த கடசியும் தயார் இல்லை. தமிழ் தேசியம் பேசும் கட்சி உட்பட.இந்தி மொழி பேசும் மாநிலம் செல்லும் போது மட்டும் இந்தி தேவை படும் மற்றபடி தேவை இல்லை. நான் துவக்க கல்வி மும்மொழி படித்தேன். தற்போது தமிழே எழுத்து பிழை இன்றி எழுத தேரியாது. எதுவும் படிக்காத என் நன்பர்கள் தற்போது வடமாநிலகளில் வாழ்ந்து வருகின்றனர் அவர்கள் இந்தியை நன்றாக பேசி எழுதி வருகின்றனர். எனவே தேவை வந்தால் எவரும் எதையும் கற்று கொள்வர் இந்து மட்டும் அல்ல.
Rate this:
Cancel
20-நவ-202108:12:22 IST Report Abuse
mohanamurugan அனைத்து மாநிலங்களிலும் தமிழ் மொழியை கற்பதற்கு ஒன்றிய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் ஏன் இந்திய மக்கள் அனைவரும் தமிழ் கற்க கூடாது மொழி என்பது கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள தானே தவிர வேறொன்றுமில்லை ஹிந்தி மீது பற்று இருக்கலாமே தவிர இந்தி வெறியர்கள் ஆக இருக்கக் கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X