பொது செய்தி

தமிழ்நாடு

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சோதனை நேற்று துவக்கம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சோதனைக்காக, நேற்று மாவட்ட ஊராட்சி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக தரை தளத்தில் உள்ள பாதுகாப்பு கிடங்கில், 1,300 எண்ணிக்கையில் கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2,600 எண்ணிக்கையில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சோதனைக்காக, நேற்று மாவட்ட ஊராட்சி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.
நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக தரை தளத்தில் உள்ள பாதுகாப்பு கிடங்கில், 1,300 எண்ணிக்கையில் கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2,600 எண்ணிக்கையில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளன. நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, முதற்கட்ட சோதனைக்காக கலெக்டர் அலுவலகத்திலிருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியினர் முன்னிலையில், மாவட்ட ஊராட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லும் பணி நடந்தது. இப்பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டார். இப்பணி, 15 நாட்கள் நடைபெற உள்ளன. இதற்காக பெங்களூருவில் இருந்து பெல் நிறுவன தொழில்நுட்ப பொறியாளர்கள், நாமக்கல் மாவட்டம் வந்துள்ளனர். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) கோவேந்தன் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X