விவசாயிகளை பிரச்னைகளில் சிக்க வைக்கும் கட்சிகள்: பிரதமர்

Updated : நவ 19, 2021 | Added : நவ 19, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
மகோபா: விவசாயிகளை, பிரச்னைகளில் சிக்க வைப்பதே சில அரசியல் கட்சிகளின் அடிப்படை அரசியல் கொள்கையாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.உ.பி., மாநிலம் மகோபா நகரில் நீர்ப்பாசன திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பண்டல்கண்ட் பகுதிக்கு என சிறப்பான வரலாறு உள்ளது. மகோபா நகரில் 3 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் துவக்கி
பிரதமர் மோடி, விவசாயிகள், அரசியல்கட்சிகள், நரேந்திர மோடி

மகோபா: விவசாயிகளை, பிரச்னைகளில் சிக்க வைப்பதே சில அரசியல் கட்சிகளின் அடிப்படை அரசியல் கொள்கையாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உ.பி., மாநிலம் மகோபா நகரில் நீர்ப்பாசன திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பண்டல்கண்ட் பகுதிக்கு என சிறப்பான வரலாறு உள்ளது. மகோபா நகரில் 3 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. வருங்காலங்களில் 4 லட்சம் குடும்பங்களுக்கு குடிநீர் கிடைக்கும். இப்பகுதி மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

டில்லியிலும், உ.பி.,யிலும் பல ஆண்டுகளாக கொள்ளையடித்தவர்கள், இந்த பகுதியின் சீரழிப்பதற்கான அனைத்து பணிகளையும் செய்தனர். இங்கு உள்ள வனம் மற்றும் இயற்கை வளங்கள் எப்படி 'மாபியா'க்களுக்கு வழங்கப்பட்டது என்பதை மக்கள் அறிவார்கள். தற்போது, அந்த மாபியாக்கள் ராஜ்ஜியம் அகற்றப்பட்டதால், சிலர் அழுகின்றனர்.


latest tamil news



நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வளர்ச்சி பணிகள் நடக்கின்றன. உஜ்வாலா யோஜனா திட்டம் விவசாயிகளுக்கு பலன் அளித்துள்ளது. விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. விவசாயிகளை பிரச்னைகளில் சிக்க வைப்பதே சில கட்சிகளின் நோக்கமாக உள்ளது. அந்த பிரச்னையில் அவர்கள் அரசியல் செய்தனர். ஆனால், அதற்கு தீர்வு காண்பதே நமது தேசிய கொள்கை.

ஏழைகளின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். பண்டல்கண்ட்டில் பல ஆண்டுகளாக வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. அணைகள் என்ற பெயரில் ஊழல் தான் நடந்தது. பண்டல்கண்ட் பகுதியில் கொள்ளையடித்த முந்தைய அரசுகள் மக்களை தவறாக வழிநடத்தின. தற்போது, தங்களின் வளர்ச்சிக்காக பாடுபடும் அரசை மக்கள் பார்க்கின்றனர். முந்தைய அரசுகள் ஓய்வில்லாமல் கொள்ளையடித்தன. ஆனால், நாங்கள் ஓய்வில்லாமல் உழைக்கிறோம்.
உ.பி., மற்றும் பண்டல்கண்ட்டின் வளர்ச்சி இனி வரும் காலங்களில் தடைபடாது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-நவ-202109:22:33 IST Report Abuse
சம்பத் குமார் 1). @ ஜெந்திபுரம், மதுரை, மோடி என்றும் தேர்தலை வைத்து வேலை செய்தது கிடையாது.1A).பொறகு எதற்கு இந்த அறிவிப்பு. அப்படி கேளுங்கள் நண்பரே. நல்ல கேள்வி இது!2). பிஜேபி அரசியல் செய்யத்தான் கட்சி நடத்துகிறது. அவியல் செய்ய அல்ல.3). மேலும் இதே சட்டத்தை பஞ்சாப்பில் காங்கிரஸ் கொண்டுவர கடந்த பதினைந்து ஆண்டுகளாக முயற்சித்து. 4). பணம் மதிப்பிண்மையை கொண்டு வந்தப்பொழது ஜந்து மாநில தேர்தலுக்கு ஆறு மாதங்கள் முன்னர் மோடி கொண்டு வந்தார். 5). ராகுல் ATM வரிசையில் நின்று பணம் எடுக்கும் காமெடி டிராமா செய்தார். விளைவு இரண்டு.‌ஒன்று அந்த ஜந்து மாநில தேர்தலில் பிஜேபி அருதி பொருமான்மையுடன் வெற்றி பெற்றது உத்திரபிரதேசம் உள்ளபடி இராண்டாவது பாகிஸ்தான் வழியாக வரும் கள்ள நோட்டுகள் ஒழிக்கப்பட்டது. 6). GST இரண்டு மாநில தேர்தல் அதாவது குஜராத்( குஜராத் மக்களுக்கு வியாபாரம் தான் முதற் தொழில் உலகில் எங்கும் போனாலும் Tradersஆக குஜராத்தி இருப்பார்கள்) உள்பட. ரிஸ்க் எடுத்து அதை அறிவித்தார்.‌விளைவு இரண்டு மாநில வெற்றி.6). தற்போது நடைபெறும் ஜந்து மாநில தேர்தலில் ஆறு மாதங்களாக மாதம் மாதம் தேர்தல் கணிப்புகள் வந்த வண்ணம் உள்ளன.‌ பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களில் பிஜேபி முன்னணியில் உள்ளது.‌7A).அவ்வளவு ஏன் கோவா மணிப்பூர் ஆகிய கிறிஸ்துவ மாநிலங்களில் கிறிஸ்துவர்கள் மோடியை புரிந்து கொண்டார்கள். அவர்களே மோடிக்கு தான் ஒட்டு என்று கருத்து கணிப்பில் சொல்லிவிட்டார்கள். இது கேரளாவிலும் அடுத்த தேர்தலில் நடைபெறும்.7). நாங்கள் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை பஞ்சாபில் காங்கிரஸ், கெஜ்ரிவால் ஜெயிக்க கூடாது‌ என்பது பிஜேபியின் செயல்பாடு. நாங்களும் அரசியல் பண்ணுவோம். இதற்கு தான் இந்த சட்டம் வாபஸ்.8). எத்தனை நாளுக்கு நாங்க கையை கட்டி கொண்டு இருப்பது நீங்கள் விவசாய போராட்டம் என்று டெல்லியில் குடியரசு தினத்தில் பண்ணிய அட்டூழியங்களை பார்த்த பிறகு.9A). மரண அடி இந்த move காங்கிரஸ் பஞ்சாபில் இனி வாலாட்ட முடியாது. அதனால் தான் எதிர்கட்சிகள் சட்டத்தை வாபஸ் பண்ணிய பிறகும் ஒரே மரண ஓலம் சத்தம் போடுகிறார்கள். எதை வைத்து இனி பஞ்சாபில் அரசியல் செய்ய முடியும்.9). வேண்டுமானால் ராகுல் சமையல் செய்வது எப்படி என தேர்தல் நிகழ்ச்சி நடத்தலாம். டான்ஸ் ஆட முடியாது.‌10). காங்கிரஸை பஞ்சாபிலிருந்து விடை கொடுக்க வேண்டும்.11). காங்கிரஸ் இல்லாத பாரதம் உருவாக வேண்டும். பொய் பேசி திரியும் கெஜிரிவால் ஒழிக்கப்பட வேண்டும். 12). Very Simple. காங்கிரஸ் ஒழிந்தால் இந்தியாவுக்கு முழு சுதந்திரம் கிடைக்கும். நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel
20-நவ-202108:35:31 IST Report Abuse
ஆரூர் ரங் சோகக் கதை . பெரும்பாலான விவசாயிகள் அறியாமை மூலம்😶 தங்களைத் தாங்களே வறுமையில் ஆழத்திக்கொள்கிறார்கள் என்பதே உண்மை. நெல், கோதுமை தேவைக்கு மேல் விளைகிறது . அதிலும் பாதி தரமற்றவை . தேவைக்கு மேல் யூரியா நிலத்தடி நீரை பயன்படுத்தி நிலவளத்தை சாகடிக்கிறார்கள்😪😪 . வீட்டில் தேவையற்ற ஆடம்பர விழா செலவுகளுக்காக பயிரை அடமானம் வைதது நிரந்தர கடனாளியாக ஆகிறார்கள். (முக்கால்வாசி பேர் குடியாலும்) இவ்வளவு தவறுகளையும் செய்து விட்டு ஆளுபவரை குற்றம் காணுவது ஏன்? மாற்றுப் பயிர்களுக்கும் புத்திசாலித்தன விவசாயத்திற்கும் மாற மறுத்தால் தற்கொலைதான்
Rate this:
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
20-நவ-202103:26:44 IST Report Abuse
anbu விவசாயிகள் தங்கள் கவலைகளை விடியல் மற்றும் பப்புவிடம் தான் கேட்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X