இந்தியா சுயாட்சி கேட்ட போது, இந்தியாவுக்கு சுயாட்சி வழங்குவதா? முதலில் சுயாட்சி என்றால் என்ன? என்று அவர்களுக்குத் தெரியுமா? குறைந்தது ஒரு அரசியல் சட்டம் வடிவமைக்க தெரியுமா? அதற்கான தகுதி அவர்களுக்கு இருக்கிறதா? என்று கேலியாகப் பேசினார் இந்திய மந்திரியாக இருந்த பர்க்கன்ஹெட்.
இந்த ஆங்கிலேய மந்திரியின் சவாலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் துடித்தது. டிசம்பர் 1928 ஆம் ஆண்டு காந்தியின் தலைமையில் கோல்கட்டாவில் காங்கிரஸ் மாநாடு கூடியது. நேதாஜி மிகுந்த உற்சாகத்துடன் தயாரானார். அவரிடம் இரண்டு முக்கிய எதிர்பார்ப்புகள் இருந்தன.
ஒன்று: ஆங்கிலேயருக்கு எதிராக மிகக் கடுமையான தீர்மானத்தை காங்கிரஸ் நிறைவேற்றும்.
இரண்டாவது; காந்தி, மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, போன்ற தலைவர்களை நேருக்கு நேர் சந்தித்து உரையாடலாம். அதனால் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்தினார் நேதாஜி.
மக்களை ஒன்றுபடுத்தியதும் அவர்தான். மேடை அமைப்பது முதற்கொண்டு அனைத்து வேலைகளையும் தனது மேற்பார்வையில் செய்தார் நேதாஜி. விஜயலட்சுமி பண்டிட் தன் தந்தை மோதிலால் நேருவுடன் கோல்கட்டா வந்திருந்தார். அங்குள்ள உற்சாகமான வரவேற்பு அவரை கவர்ந்தது. சந்தேகமே இல்லாமல் போஸ் தான், கோல்கட்டாவின் ஹீரோதான் என்றார் அவர்.
(எழுத்துருவாக்கம்: ஆதலையூர் சூரியகுமார் மாநில செயலாளர், தேசிய சிந்தனைக் கழகம், தஞ்சாவூர்)
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE