அன்று மறுத்த போலீஸ் இன்று எப்.ஐ.ஆர் போட்டது; போக்சோ சட்டத்தில் 41 யூடியூப் சேனல்கள் மீது வழக்கு

Updated : நவ 19, 2021 | Added : நவ 19, 2021 | கருத்துகள் (7)
Advertisement
கோவை: கோவையில் தற்கொலை செய்துக்கொண்ட பிளஸ் 1 மாணவியின் புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை வெளியிட்ட 41 யூடியூப் சேனல்கள் மீது கோவை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்குப்பதிவு குறித்து வெளியான தகவலை மறுத்த போலீசார், தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.கோவையில் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த, 17 வயது
Youtube, POCSO, Youtube Channel, யூடியூப் சேனல், மாணவி, அடையாளங்கள், புகைப்படம், போக்சோ, வழக்குப்பதிவு

கோவை: கோவையில் தற்கொலை செய்துக்கொண்ட பிளஸ் 1 மாணவியின் புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை வெளியிட்ட 41 யூடியூப் சேனல்கள் மீது கோவை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்குப்பதிவு குறித்து வெளியான தகவலை மறுத்த போலீசார், தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவையில் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த, 17 வயது மாணவிக்கு பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததால், அப்பள்ளியில் இருந்து விலகி, வேறு பள்ளியில் சேர்ந்தார். இந்நிலையில் மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்தனர்.


latest tamil news


இந்நிலையில், மாணவியின் புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை வெளியிட்ட யூடியூப் சேனல்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், இதனை அப்போது போலீஸ் அதிகாரிகள் மறுத்தனர். இந்நிலையில், மாணவியின் புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை வெளியிட்ட 41 யூடியூப் சேனல்கள் மீது கோவை மாநகர போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு வழக்குப்பதிவு குறித்து மறுப்பு தெரிவித்த போலீசார் இப்போது அவர்களே வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
20-நவ-202103:32:53 IST Report Abuse
மலரின் மகள் மீடியாவில் நுழைவது பத்திரிக்கை நடத்துவது என்பதெல்லாம் எதோ வாட்ஸாப்ப் செய்திகளை எதை பற்றியும் கவலைப்படாமல் பரப்புவது போல நிறையபேர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். யு டியூப் தளம் இலவசம் என்பதாலும் அவர்கள் பணம் தருகிறார்கள் சேனல் நடத்துபவர்களுக்கு அதிலும் பணம் அதிகம் கிடைக்கும் நிறையபேர் சப்ஸ்கிரைப் செய்திருந்தாலும் பல ஆயிரக்கன்னைக்காகவர்கள் பார்த்திருந்தாலும் என்றவகையில் இவர்கள் காப்பி ரைட் விஷயங்கள் என்று கூடு கவலை படாமல் கடைதேங்காயோ வழிப்பிள்ளையாரோ என்றவகையில் பகிர்கிறார்கள். இதற்காகத்தான் மத்திய அரசு மீடியாக்கள் சட்டத்தை குறிப்பாக ஆன்லைன் மீடியாக்கள் சட்டத்தை கொண்டுவந்தது. எந்த வலைத்தளம் தனது தளத்தில் மற்றவர்களை பதிய கருத்துக்களை அனுமதித்தாலும் அதை கண்காணித்து தவறான எதிர்மறையான தேசத்தின் சட்டதிட்டங்களுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பின் உடனடியாக அதை நீக்கவேண்டும் என்றும் அதற்கு பொறுப்பான ஒரு இந்திய பிரஜையை தான் அதிகாரியாக நியமிக்கவேண்டும் என்று சட்டமியற்றியது. அதை பலர் எதிர்த்தார்கள், பின்னாளில் மிகப்பெரிய அந்த வலைத்தளங்கள் எல்லாம் அரசுக்கு கட்டப்பட்டன. அரசு எதற்காக அந்த சட்டம் கொண்டுவந்தது என்பது இப்போது தெரிகிறது பாருங்கள். பொறுப்பான பத்திரிகைகள் சட்டம் அறிந்தவைகள் சிறப்பாக செய்யும். நிர்பயா என்று அந்த பாலியல் வன்முறையால் உயிரிழந்த பெண்ணின் சோகம் உலகம் அறிந்ததே. அந்த பெண்ணின் பெயர் அனைவருக்கும் அறிந்ததே, இருந்தாலும் அதை யாரும் நேரிடையாகவோ அல்லது இலைமறைகாயாகவோ கூட சுட்டி காட்டவில்லை. பெண்ணின் தந்தையே தனது மகளின் பெயரை குறிப்பிட்டார் இருந்தும் பத்திரிகைகள் தர்மமும் சட்டமும் எதிரான. பொறுப்பாகவே செயல்பட்டன. யு டியூபிலோ கல்லூரி படிப்பை அரைகுறையாக படித்துக்கொண்டிருக்கும் சிறுவர்கள் கூட பதிவிட ஆரம்பித்து விட்டார்கள். இதையெல்லாம் முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். தண்டனைகள் நிச்சயம் பெருமளவில் தரவேண்டும். அந்த பெண்ணிற்கு நீதி வேண்டும் நியாயம் வேண்டும் என்று கோரிக்கைவிடுவதாக இவர்கள் அனைவருமே அந்த பெண்ணின் குடும்பத்தை மனஉளைச்சலுக்கு உள்ளாக்குகிறார்கள். சட்டம் தனது கடைமையை செய்ய முயலவில்லையா என்ன. இவர்களுக்கு வேண்டுமானால் அரசுக்கு கடிதம் எழுதலாமே. முதல்வரின் தனி செல்லுக்கு உட்பட பிரதமந்திரியின் அலுவலகத்திற்கு கூட பிரதமரின் பெயரிலேயே கூட மனு அனுப்பலாம். சட்டத்தின் வழியில் செல்லாமல் அல்லது சட்டமன்ற பாராளுமன்ற பிரதிநிதிகளை மன்றத்தில் பேச சொல்லலாம் நடவடிக்கை எடுக்கச்சொல்லலாம். ஒவ்வொரு தொகுதியிலும் அவர்களின் அலுவலகம் இருக்கிறது. அங்கு சென்று மனு கொடுக்கலாம். அரசியல் தலைவர்களை கவனத்திற்கு கொண்டு செல்லலாம். எல்லாவற்றையும் மேலாக அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் பத்திரிகைகள் என்று அனைவரும் இந்த விஷயத்தில் கண்டிப்பாகவும் நீதி கிடைக்கவேண்டும் என்றுதான் செயல்படுகிறார்கள். அரைவேக்காட்டு இலவச சேனல்களுக்கு இதில் பணம் பண்ண வழியிருக்கிறது என்பதை தவிர வேறென்ன இருக்கமுடியும். தண்டனைக்குரிய குற்றம் செய்தோர் அவரகள் தானே. பணம் பண்ணுவது அவ்வளவு எளிதான முறை என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். தவறான வழிகளில் தான் சுலபமாகவும் குறுகிய காலத்திலும் பணம் வரும் அது தவறான திசையிலிருந்து வருவது.
Rate this:
Cancel
amicos - Bali,இந்தோனேசியா
19-நவ-202122:38:06 IST Report Abuse
amicos இதுவே எடப்பாடி ஆட்சியாக இருக்கணும், ஸ்டாலின் வேஷ்டி சட்டையை எல்லாம் கிஷ்ச்சி நின்னு இருப்பர்
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
19-நவ-202121:00:57 IST Report Abuse
Natarajan Ramanathan ஊடகங்கள் நடந்த உண்மையான தகவல்களை வெளியிடும்போது அவர்கள்மீது வழக்கு போடுவது சரியா
Rate this:
visu - Pondicherry,இந்தியா
19-நவ-202122:50:17 IST Report Abuse
visuஊடகம் என்பதெற்காக எதை வேண்டுமானாலும் வெளியிட முடியாது பெயர் புஹைபடம் வெளியிட்டதால் வழக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X