பொது செய்தி

தமிழ்நாடு

திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது

Updated : நவ 19, 2021 | Added : நவ 19, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் மலை உச்சியில், அரோகரா கோஷம் முழங்க மகா தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. இதற்காக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, நவ.,10ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நாளான
திருவண்ணாமலை, மகா தீபம், கார்த்திகை, தீப திருவிழா, அண்ணாமலையார் கோவில்

திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் மலை உச்சியில், அரோகரா கோஷம் முழங்க மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. இதற்காக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, நவ.,10ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நாளான இன்று (நவ.,19) அதிகாலை, 2:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அண்ணாமலையார் மூல கருவறையில், சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் ஓத, வேதமந்திரங்கள் முழங்க, நெய்த்திரியிட்ட விளக்கு ஏற்றப்பட்டது.


latest tamil news


பின், பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், ஐந்து மடக்குகளில், தீபம் ஏற்றப்பட்டது. அதிகாலை, 4:00 மணிக்கு, பரணி தீபம் ஏற்றப்பட்டு, முதல் பிரகாரத்தில் வலம் வந்தது. பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. தொடர்ந்து கோவிலில் உள்ள, அனைத்து சன்னதிகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. சன்னதியில் ஏற்றப்பட்ட பரணி தீபத்தின், ஐந்து அகல் விளக்குகளையும், கொடி மரத்தின் முன்பாக உள்ள, அகண்டத்தில் ஒன்று சேர்த்தனர்; பின், ஐந்து தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டு, மலை உச்சியில் உள்ளவர்களுக்கு தெரியும் படி காண்பிக்கப்பட்டது.


latest tamil news


அதை அடுத்து, மாலை, 6:00 மணிக்கு, மலை மீது, மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம், தொடர்ந்து, 10 நாட்கள் எரியும். இது, சுற்றுவட்டாரத்தில், 40 கி.மீ., தூரம் வரை தெரியும். கோவில் வளாகம் முழுவதும், வண்ண விளக்குகளாலும், பிரகாரம், தங்க கொடிமரம், தீப தரிசன மண்டபம் என, கோவில் முழுவதும், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. தீபத்திருவிழாவில் கோவிட் விதிகளை பின்பற்றி 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கலாம் எனவும், பங்கேற்பவர்கள் கிரிவலம் செல்லலாம் எனவும் கிரிவல பாதையில் இருந்து தரிசனம் செய்யலாம் எனவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Bharani - singapore,சிங்கப்பூர்
19-நவ-202120:03:26 IST Report Abuse
S. Bharani அகிலம் முழுவதிலும் சிவமயம் ஆக வேண்டும் நமசிவாய வாழ்க
Rate this:
Cancel
19-நவ-202119:43:25 IST Report Abuse
SUBBU - MADURAI உலகையே அடக்கி ஆளும் எம்பெருமான் அண்ணாமலையாருக்கு அரோகரா அரோகரா
Rate this:
Cancel
உளறுவாயன் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
19-நவ-202119:02:20 IST Report Abuse
உளறுவாயன் அண்ணமலையாருக்கு அரகரொகரா.. .. .. .. அரோகரா .. .. முருகனுக்கு அடுத்து .. .. அண்ணாமலையாருக்கு மட்டுமே .. .. அரகரோகரா .. . இதன் சிறப்பு .. ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X