செய்தி செய்தி

தமிழ்நாடு

யானைகள் நடமாடும் வழித்தடத்தில் வேகத்தடுப்பு அமைக்க எதிர்பார்ப்பு

Added : நவ 19, 2021
Share
Advertisement
வால்பாறை: யானைகள் வழித்தடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்தில், 300க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. தமிழக -- கேரள எல்லையில் வால்பாறை அமைந்துள்ளதால், இரு மாநில வன பகுதியில் அதிக அளவில் யானைகள் முகாமிட்டுள்ளன.பகல் நேரத்தில் வனத்திலும், இரவில் வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதியில் முகாமிடும்

வால்பாறை: யானைகள் வழித்தடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்தில், 300க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. தமிழக -- கேரள எல்லையில் வால்பாறை அமைந்துள்ளதால், இரு மாநில வன பகுதியில் அதிக அளவில் யானைகள் முகாமிட்டுள்ளன.பகல் நேரத்தில் வனத்திலும், இரவில் வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதியில் முகாமிடும் யானைகள், உணவு, குடிநீருக்காக அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றன.யானைகள் சாலைகளை கடக்கும் பகுதிகளில் மிக வேகமாக செல்லும் வாகனங்களால் யானைகளுக்கும், வாகனத்தில் செல்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:மலைப்பகுதியில் ஆண்டாண்டு காலமாக யானைகள் செல்லும் பாதை அழிக்கப்பட்டு, அங்கு தேயிலை பயிரிடப்பட்டுள்ளன. பல இடங்களில் வனத்துறையினர் ஆதரவோடு மரங்கள் வெட்டி கடத்தப்படுகின்றன. குறிப்பாக, யானைகளின் வழித்தடத்தில் தனியார் எஸ்டேட் நிர்வாகங்கள் சொகுசு விடுதிகள் கட்டியுள்ளன. யானைகள் வழி மாறி எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன.இதனால், அடிக்கடி வனவிலங்கு - மனித மோதலும் அதிகரித்து வருகிறது. எனவே யானைகளின் பாதுகாப்பு கருதி அவை நடமாடும் பகுதியில் உள்ள ரோடுகளில் வனத்துறை சார்பில், வேகத்தடை அமைக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X