செய்தி செய்தி

தமிழ்நாடு

பயன்படாத பள்ளி கட்டடம் சமூக விரோதிகள் கூடாரமானது

Added : நவ 19, 2021
Share
Advertisement
வால்பாறை: வால்பாறை நகரில், பயன்படாத பள்ளி கட்டடம் காதலர் பூங்காவாக மாறி வருவதால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் இடைப்பட்ட பகுதியில், கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட எஸ்.எஸ்.ஏ. பள்ளி கட்டடம் அமைந்துள்ளது. இந்த பள்ளி கட்டடம் சில ஆண்டுகளாக பயன்படுத்தாததால், புதர் மண்டிக்கிடக்கிறது.

வால்பாறை: வால்பாறை நகரில், பயன்படாத பள்ளி கட்டடம் காதலர் பூங்காவாக மாறி வருவதால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் இடைப்பட்ட பகுதியில், கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட எஸ்.எஸ்.ஏ. பள்ளி கட்டடம் அமைந்துள்ளது. இந்த பள்ளி கட்டடம் சில ஆண்டுகளாக பயன்படுத்தாததால், புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால், பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடம் காட்சிப்பொருளாக மாறி வருகிறது.இதனால், பள்ளி வகுப்பறையை, காலை நேரத்தில் சிலர் காதலர் பூங்காவாக மாற்றி வருகின்றனர். இரவு நேரங்களில் இந்த கட்டடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது.பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறையில் இடப்பற்றாக்குறையால் பல்வேறு அரசு அலுவலகங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. பயன்படாத பள்ளி கட்டடத்தை, அரசு அலுவலகமாக மாற்ற வேண்டும்.பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், பள்ளி அருகே நடக்கும் அத்துமீறலை போலீசார் கண்காணித்து, தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இரு பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்களும், சட்டவிரோத செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X