'தென்னையை வளர்த்தாலும் கண்ணீர்!' வெள்ளை ஈக்கள் தாக்குதல் அதிகரிப்பு; 72 லட்சம் மரங்களுக்கு மேல் பாதிப்பு

Added : நவ 19, 2021
Share
Advertisement
ஆனைமலை: பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், 1.15 லட்சம் ஏக்கரில், 72 லட்சம் தென்னை மரங்கள் வெள்ளை ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளதால், விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில், 1.50 லட்சம் ஏக்கரில், ஒரு கோடி தென்னை மரங்களுக்கும் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த, 2011ல் கேரள - தமிழக எல்லைகளில் வெள்ளை



ஆனைமலை: பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், 1.15 லட்சம் ஏக்கரில், 72 லட்சம் தென்னை மரங்கள் வெள்ளை ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளதால், விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில், 1.50 லட்சம் ஏக்கரில், ஒரு கோடி தென்னை மரங்களுக்கும் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த, 2011ல் கேரள - தமிழக எல்லைகளில் வெள்ளை ஈக்கள் பரவத்துவங்கியது.படிப்படியாக வெள்ளை ஈக்கள் பரவி தற்போது, தமிழகம் முழுவதிலும் பாதிப்பு உள்ளது. தாக்குதலுக்கு உள்ளான மரங்களை பாதுகாக்க முடியாமல், விவசாயிகள் மரங்களை வெட்டி அழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.ஆண்டுதோறும் மழைக்காலத்தில் பரவலின் வீரியம் குறைந்தும், கோடையில் பரவல் அதிகரிக்கிறது. இந்தாண்டு கடந்த ஆறு மாதங்களாக அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையிலும், தாக்குதல் குறையாமல் உள்ளது.பொள்ளாச்சி, ஜமீன் முத்துார், ஜலத்துார், ஜமீன்ஊத்துக்குளி, நல்லுாத்துக்குளி, திம்மங்குத்து, கோபாலபுரம், ஆனைமலை, மாரப்பகவுண்டன்புதுார், காளியாபுரம், மணக்கடவு உள்பட பல பகுதிகளில், தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் காணப்படுகிறது.வேளாண்துறை கணக்கெடுப்பின் படி, பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாக்களில் மொத்த சாகுபடி பரப்பில், 70 சதவீதம் வெள்ளை ஈக்கள் தாக்குதல் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, 1.15 லட்சம் ஏக்கரில், 72 லட்சம் தென்னை மரங்கள் பாதித்துள்ளன.தற்போது, தென்னம்பாளையின் அடிப்பகுதியிலும், குரும்பல், குருத்துப்பகுதியிலும் தாக்குதல் காணப்படுகிறது. குரும்பல்கள் உதிர்ந்து, மேல் மட்ட பாளைகளில் காய்ப்பு இல்லாமல் உள்ளது. 35 சதவீதத்துக்கும் மேல் மகசூல் குறைந்து விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.வெள்ளை ஈக்களின் பாதிப்பால், 'தென்னையை வளர்த்தாலும் கண்ணீர்' என்று விவசாயிகள் புலம்புகின்றனர். மகசூல் குறைவதால், தென்னை சார்ந்த அனைத்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் உற்பத்தியும் குறைந்து, வர்த்தகம் பாதிக்கிறது.மாநில மற்றும் மத்திய தென்னை வளர்ச்சி வாரிய விஞ்ஞானிகளைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, தற்போதைய கட்டுப்பாட்டு முறைகளுக்கு மாற்றாக, புதிய வழிமுறைகளை கண்டறிய வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.விவசாயிகள் கூறியதாவது:வெள்ளை ஈ தாக்குதலால், இளநீர், தேங்காய் உற்பத்தி பெரும் அளவு குறைந்து, நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலால் ஓலைகள் கருப்பு நிறமாக மாறி, தடுக்கு தயாரிக்க பயன்படுத்தும் ஓலையின் விலையும் குறைந்துள்ளது.'விளக்குப்பொறி, மஞ்சள் ஒட்டுப்பொறி வைக்கணும், விசைத்தெளிப்பான் வாயிலாக தண்ணீரை பீய்ச்சி அடிக்கணும், இரை விழுங்கிகள், ஒட்டுண்ணிகள் விடணும்,' என, வேளாண்துறை மற்றும் தென்னை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், பல்வேறு நோய் கட்டுப்பாட்டு முறைகளை தெரிவிக்கின்றனர்.இந்த கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றுகிறோம். ஆனால், பத்து சதவீதம் வரையில் தான் தாக்குதல் குறைகிறது. வெள்ளை ஈ தாக்குதல் குறைவதற்கு பதிலாக, நாளுக்கு நாள் வீரியமடைந்து தாக்குதல் அதிகரிக்கிறது. இதற்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X