மழைநீர் தேங்கும் குட்டையில் புதர், கழிவு நீர் ஆக்கிரமிப்பு

Added : நவ 19, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, அரசம்பாளையத்தில் மழை நீர் சேமிப்பு குட்டையை ஆக்கிரமித்துள்ள, முட்புதர்களை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.கிணத்துக்கடவு ஒன்றியம், அரசம்பாளையம் கிராமத்தில் மழை நீர் சேமிப்புக்காக, தலா, 1.5 ஏக்கர் பரப்பளவில் இரு குட்டைகளும், ஒரு சிறு குட்டையும் அமைந்துள்ளது.இவற்றில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் அமைக்கப்பட்ட

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, அரசம்பாளையத்தில் மழை நீர் சேமிப்பு குட்டையை ஆக்கிரமித்துள்ள, முட்புதர்களை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.கிணத்துக்கடவு ஒன்றியம், அரசம்பாளையம் கிராமத்தில் மழை நீர் சேமிப்புக்காக, தலா, 1.5 ஏக்கர் பரப்பளவில் இரு குட்டைகளும், ஒரு சிறு குட்டையும் அமைந்துள்ளது.இவற்றில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் அமைக்கப்பட்ட குட்டையை ஆக்கிரமித்திருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டு, நீர் தேக்கத்துக்கு வெள்ளை அடிக்கப்பட்டது. விரைவில், மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.இக்குட்டையின் எதிரே அமைந்துள்ள மற்றொரு குட்டை, இதுவரை துார்வாரப்படவில்லை. மேலும், ரோட்டோர பாதுகாப்பு தடுப்புகள் தெரியாத அளவுக்கு மண்டி கிடக்கும் புதரும் அகற்றப்படவில்லை.இக்குட்டை ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்டது. 20 அடி ஆழமுள்ள குட்டையில் அடர்ந்த புதரானது, 20 அடி உயர்ந்து நிற்கிறது. இதன் கரைகளும் முட்புதர்களால் மறைக்கப்பட்டுள்ளது.குட்டையில் மழை நீர் தேங்கினால், அருகில் அமைந்துள்ள பாசன கிணறுகளில் நீர் மட்டம் உயரும். பல ஆண்டுகளாக, மழை நீர் மட்டும் இக்குட்டையில் தேங்கியது. ஆனால், சமீபகாலமாக, கிராமத்தின் ஒட்டு மொத்த சாக்கடை கழிவுநீர் தேங்கி சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எனவே, குட்டையை ஆக்கிரமித்துள்ள, முட்புதர்களை அகற்றி, சாக்கடை நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X