தொட்டிகளில் மாசடைந்த தண்ணீர்: வனவிலங்குகள் பாதிக்கும் அபாயம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
உடுமலை: தரைமட்டத்தொட்டிகளில் மாசடைந்த தண்ணீர் தேக்கமடைந்திருந்தால், அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனைமலை புலிகள் காப்பம், உடுமலை, அமராவதிவனச்சரகங்கள் மற்றும் பவர்சோன் பகுதிகளான கொழுமம், வந்தரவு ஆகிய வனங்களில், வனவிலங்குகள் இடம் பெயர்வை தடுக்கும் வகையில், தடுப்பணை மற்றும் கசிவுநீர் குட்டை அமைக்கப்பட்டுள்ளன.தற்போது, பண்ணைக்குட்டைகளும்

உடுமலை: தரைமட்டத்தொட்டிகளில் மாசடைந்த தண்ணீர் தேக்கமடைந்திருந்தால், அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனைமலை புலிகள் காப்பம், உடுமலை, அமராவதிவனச்சரகங்கள் மற்றும் பவர்சோன் பகுதிகளான கொழுமம், வந்தரவு ஆகிய வனங்களில், வனவிலங்குகள் இடம் பெயர்வை தடுக்கும் வகையில், தடுப்பணை மற்றும் கசிவுநீர் குட்டை அமைக்கப்பட்டுள்ளன.தற்போது, பண்ணைக்குட்டைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில், புங்கன்ஓடை, நவ்வாலோடை, கொங்குரார்குட்டை என சில இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, 'சோலார் பம்ப்' உதவியுடன், தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.பின், குழாய் இணைப்பு வாயிலாக, தடுப்பணைகள் நிரப்பப்பட்டும் வருகின்றன. கடந்த சில தினங்களாக, மழையின் தாக்கம் பரவலாக அதிகரித்ததால், நீராதாரமிக்க பகுதிகள், தண்ணீர் வரத்து காணப்பட்டது.தற்போது, மழையின் தாக்கம் குறைந்துள்ளதால், தரைமட்ட தொட்டிகளில் தேங்கியுள்ள தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. பாசி படிந்து காணப்படும் தண்ணீரைப் பருகும் வனவிலங்குகள் பாதிப்பும் அடையும் நிலை உருவாகியுள்ளது.எனவே, அவற்றை கண்டறிந்து, அப்புறப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.பொதுமக்கள் கூறுகையில், 'நீண்ட நாட்களாக தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் புழுக்கள் உற்பத்தியாகின்றன. இதனை பருகும் வனவிலங்குகள் பாதிப்படைகின்றன. மாசடைந்த தண்ணீரை அகற்றம் செய்வது அவசியம். அதேபோல், தண்ணீர் தொட்டிகளின் அருகில் நோய் எதிர்ப்பு, தாதுச்சத்துக்கள் மற்றும் குடற்புழு நோயை கட்டுப்படுத்தும் மருந்துகள் அடங்கிய உப்புக்கட்டிகளை வைக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X