வீதிகளில் வாகன ஆக்கிரமிப்பு

Added : நவ 19, 2021
Share
Advertisement
உடுமலை: உடுமலை நகரில், சமீப காலமாக வாகனங்களில் இயக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு ஏற்ப பார்க்கிங் வசதி இல்லாததால், நெரிசல் ஏற்படுகிறது. மேலும், வீதிகளை ஆக்கிரமித்தவாறே, ஒவ்வொரு கடைகளும் விரிவுபடுத்தப்படுகின்றன.பாதசாரிகளுக்கான நடைபாதையும் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. மேலும், டூ வீலர்கள் நிறுத்த பயன்படுத்தப்படுகிறது. நகருக்கு வந்து செல்லும் மக்கள், ரோட்டில் நடந்து

உடுமலை: உடுமலை நகரில், சமீப காலமாக வாகனங்களில் இயக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு ஏற்ப பார்க்கிங் வசதி இல்லாததால், நெரிசல் ஏற்படுகிறது. மேலும், வீதிகளை ஆக்கிரமித்தவாறே, ஒவ்வொரு கடைகளும் விரிவுபடுத்தப்படுகின்றன.பாதசாரிகளுக்கான நடைபாதையும் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. மேலும், டூ வீலர்கள் நிறுத்த பயன்படுத்தப்படுகிறது. நகருக்கு வந்து செல்லும் மக்கள், ரோட்டில் நடந்து செல்வதாலும், ரோட்டை கடக்க முயற்சிப்பதாலும், போக்குவரத்து பாதிக்கிறது.கடைகளுக்கு முன், வைக்கப்படும் விளம்பரப்பலகைகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. நகரில் முக்கிய வீதிகள் மட்டுமின்றி, குடியிருப்பு வீடுகளை ஒட்டிய ரோடுகளிலும் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.மழைநீர் வடிகாலாக பயன்படும் கால்வாய்களிலேயே குப்பை கொட்டப்படுகிறது. இதனால், கழிவுநீர் தேக்கத்தால் சுகாதாரம் பாதிக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற, நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X