ஒரு போன் போதுமே!

Added : நவ 19, 2021
Share
Advertisement
வேகத்தடைக்கு வர்ணம் பூசுங்க!பொள்ளாச்சி நகராட்சி, 8 வது வார்டுக்கு உட்பட்ட, எஸ்.பி.ஐ., காலனியில், மூன்று இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வேகத்தடையில் வெள்ளை வர்ணம் அடிக்காததால், வாகனங்கள் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றன.எம்.இளந்தென்றல், பொள்ளாச்சி.ரோட்டை கொஞ்சம் கவனிங்கபொள்ளாச்சி, வஞ்சியாபுரம் ரோட்டில் இருந்து, நாட்டுக்கல்பாளையம் செல்லும் ரோட்டின்

வேகத்தடைக்கு வர்ணம் பூசுங்க!பொள்ளாச்சி நகராட்சி, 8 வது வார்டுக்கு உட்பட்ட, எஸ்.பி.ஐ., காலனியில், மூன்று இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வேகத்தடையில் வெள்ளை வர்ணம் அடிக்காததால், வாகனங்கள் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றன.எம்.இளந்தென்றல், பொள்ளாச்சி.ரோட்டை கொஞ்சம் கவனிங்கபொள்ளாச்சி, வஞ்சியாபுரம் ரோட்டில் இருந்து, நாட்டுக்கல்பாளையம் செல்லும் ரோட்டின் சந்திப்பு பகுதி புதுப்பிக்கப்படாமல், குண்டும், குழியுமாக உள்ளது. மழைநீர் தேங்கி நிற்கிறது. புதிதாக அமைத்த ரோடும் தரமின்றி உள்ளது.வி.கிருஷ்ணமூர்த்தி,வஞ்சியாபுரம் பிரிவு.
'பேரிகார்டு' வைக்கணும்உடுமலை - தாராபுரம் ரோட்டில், ஏரிப்பாளையம் அருகில், குடியிருப்புகள் அதிகமுள்ளது. அங்கு வைத்திருந்த 'பேரிகார்டு'கள் அகற்றப்பட்டதால், விபத்து ஏற்படுகிறது. உயிரிழப்பு விபத்து தவிர்க்க, பேரிகார்டு அமைக்க வேண்டும்.சி.தமிழ்செல்வன், ஏரிப்பாளையம்.வழுக்கல் பாதை சுத்தமாகுமா?வால்பாறை நகரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் நடந்து செல்லும் வழியில், வழுக்கல் நிறைந்துள்ளது. நகராட்சி சார்பில் இந்த பகுதியில், பிளீச்சிங் பவுடர் துாவி, நடைபாதைகளை சுத்தம் செய்ய வேண்டும்.க.வேல்முருகன், வால்பாறை.
தசாரிகள் தடுமாற்றம்பொள்ளாச்சி, நியூஸ்கீம் ரோட்டில் இருந்து, டி.எஸ்.பி., அலுவலகம் செல்லும் ரோட்டில், 'சென்டர் மீடியன்' அமைக்காததால் பள்ளம் உள்ளது. ரோடு சந்திப்பு பகுதியும் புதுப்பிக்கப்படாமல் உள்ளதால், பாதசாரிகள் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.எம்.ராஜ்குமார், பொள்ளாச்சி.
மின்கம்பத்தை இடம் மாற்றுங்கபொள்ளாச்சி, ஸ்டேட் பாங்க் எதிரில் ரோடு விரிவாக்கம் செய்த பகுதியில், மின்கம்பம் மாற்றியமைக்கப்படாமல் உள்ளது. கம்பத்தின் 'ஸ்டே' கம்பி இருப்பது தெரியாமல், இரவு நேரத்தில் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றன.மு.ஆறுச்சாமி, பொள்ளாச்சி.
பயணிகள் தவிப்புதுங்காவி பஸ் ஸ்டாப்பில் உள்ள நிழற்கூரையில் போதிய இருக்கைகள் இல்லை. இதனால் அங்கு பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். அங்கு கூடுதலாக இருக்கை வசதி செய்து தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வே. காளிமுத்து.துங்காவி.
மெகா குழியால் அச்சம்உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் காமராஜர் சிலை பின் மெகா குழி காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக வாகனங்கள் செல்லும் போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதை சரிசெய்ய நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சி. ஜெயராமன், உடுமலை.அடையாளம் வேண்டும்உடுமலை - அமராவதி வரை செல்லும் ரோட்டில்,வேகத்தடைக்கான அடையாளம் இல்லை. அந்த ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை தெரிவதில்லை. எனவே, அதில் வெள்ளைக்கோடு வரைய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏ.ராமசாமி,உடுமலை.
பராமரிக்கப்படுமா?கணியூர் ஆஸ்பத்திரி மேடுபஸ் ஸ்டாப் நிழற்கூரை பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் இதை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே நிழற்கூரையை பராமரிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வே.கிருஷ்ணன், கணியூர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X